/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
மத்திய மண்டல அணி முன்னிலை: துலீப் டிராபி அரையிறுதியில்
/
மத்திய மண்டல அணி முன்னிலை: துலீப் டிராபி அரையிறுதியில்
மத்திய மண்டல அணி முன்னிலை: துலீப் டிராபி அரையிறுதியில்
மத்திய மண்டல அணி முன்னிலை: துலீப் டிராபி அரையிறுதியில்
ADDED : செப் 06, 2025 09:37 PM

பெங்களூரு: துலீப் டிராபி அரையிறுதியில் மத்திய மண்டல அணி முன்னிலை பெற்றது.
பெங்களூருவில் நடக்கும் துலீப் டிராபி கிரிக்கெட் அரையிறுதியில் மேற்கு, மத்திய மண்டல அணிகள் விளையாடுகின்றன. மேற்கு மண்டல அணி முதல் இன்னிங்சில் 438 ரன் எடுத்தது. இரண்டாம் நாள் முடிவில் மத்திய மண்டல அணி 229/2 ரன் எடுத்திருந்தது.
மூன்றாம் நாள் ஆட்டத்தில் சுபம் சர்மா (96), கேப்டன் ரஜத் படிதர் (77), உபேந்திரா யாதவ் (87), ஹர்ஷ் துபே (75) கைகொடுத்தனர். ஆட்டநேர முடிவில் மத்திய மண்டல அணி முதல் இன்னிங்சில் 556/8 ரன் எடுத்து, 118 ரன் முன்னிலை பெற்றிருந்தது.
கஜூரியா சதம்: மற்றொரு அரையிறுதியில் தெற்கு, வடக்கு மண்டல அணிகள் விளையாடுகின்றன. தெற்கு மண்டல அணி முதல் இன்னிங்சில் 536 ரன் குவித்தது. பின் களமிறங்கிய வடக்கு மண்டல அணிக்கு சுபம் கஜூரியா சதம் கடந்து கைகொடுத்தார். நிஷாந்த் சிந்து (82) அரைசதம் விளாசினார். ஆட்டநேர முடிவில் வடக்கு மண்டல அணி முதல் இன்னிங்சில் 278/5 ரன் எடுத்திருந்தது. கஜூரியா (128) அவுட்டாகாமல் இருந்தார். தெற்கு மண்டலம் சார்பில் குர்ஜப்னீத் சிங் 3 விக்கெட் வீழ்த்தினார்.