sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

கிரிக்கெட்

/

இந்தியா-பாக்., மோதல் எப்போது * சாம்பியன்ஸ் டிராபி தொடரில்...

/

இந்தியா-பாக்., மோதல் எப்போது * சாம்பியன்ஸ் டிராபி தொடரில்...

இந்தியா-பாக்., மோதல் எப்போது * சாம்பியன்ஸ் டிராபி தொடரில்...

இந்தியா-பாக்., மோதல் எப்போது * சாம்பியன்ஸ் டிராபி தொடரில்...


ADDED : டிச 24, 2024 11:25 PM

Google News

ADDED : டிச 24, 2024 11:25 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துபாய்: சாம்பியன்ஸ் டிராபி தொடர் அட்டவணை வெளியானது. இந்தியா, பாகிஸ்தான் அணிகள் பிப். 23ல் துபாயில் மோத உள்ளன.

ஐ.சி.சி., சாம்பியன்ஸ் டிராபி 9வது சீசன், 2025 பிப். 19 முதல் மார்ச் 9 வரை பாகிஸ்தானில் நடக்கவுள்ளது. இதில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான், இந்தியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உட்பட, தரவரிசையில் 'டாப்-8' ஆக உள்ள அணிகள் பங்கேற்கின்றன. இவை இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

பாதுகாப்பு காரணங்களுக்கான இந்திய அணி, பாகிஸ்தான் செல்ல மறுத்தது. இதனால் இந்திய அணி விளையாடும் லீக் போட்டிகள் மட்டும் துபாயில் நடக்க உள்ளன.

இதற்கான அட்டவணை நேற்று வெளியானது. இந்திய அணி 'ஏ' பிரிவில் பாகிஸ்தான், வங்கதேசம், நியூசிலாந்து அணிகளுடன் இடம் பிடித்துள்ளது. 'பி' பிரிவில் ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா அணிகள் இடம் பெற்றுள்ளன.

முதல் மோதல்

பிப். 19ல் கராச்சியில் நடக்கும் முதல் போட்டியில் பாகிஸ்தான், நியூசிலாந்து மோதும். இந்திய அணி தனது முதல் லீக் போட்டியில், வங்கதேசத்தை பிப். 20ல் சந்திக்கிறது.

பைனல் எங்கே

லீக் சுற்றில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிரண்டு இடம் பிடிக்கும் அணிகள், வரும் மார்ச் 4, 5ல் நடக்கும் அரையிறுதியில் விளையாடும். பைனல் மார்ச் 9ல் பாகிஸ்தானின் லாகூரில் நடக்கும். ஒருவேளை இந்திய அணி அரையிறுதி, பைனலுக்கு முன்னேறினால், போட்டிகள் துபாயில் நடக்கும்.

அட்டவணை

தேதி பிரிவு அணிகள் இடம்

பிப். 19 ஏ பாகிஸ்தான்-நியூசிலாந்து கராச்சி

பிப். 20 ஏ இந்தியா-வங்கதேசம் துபாய்

பிப். 21 பி ஆப்கானிஸ்தான்-தென் ஆப்ரிக்கா கராச்சி

பிப். 22 பி ஆஸ்திரேலியா-இங்கிலாந்து லாகூர்

பிப். 23 ஏ இந்தியா-பாகிஸ்தான் துபாய்

பிப். 24 ஏ வங்கதேசம்-நியூசிலாந்து ராவல்பிண்டி

பிப். 25 பி ஆஸ்திரேலியா-தென் ஆப்ரிக்கா ராவல்பிண்டி

பிப். 26 பி ஆப்கானிஸ்தான்-இங்கிலாந்து லாகூர்

பிப். 27 ஏ பாகிஸ்தான்-வங்கதேசம் ராவல்பிண்டி

பிப். 28 பி ஆப்கானிஸ்தான்-ஆஸ்திரேலியா லாகூர்

மார்ச் 1 பி இங்கிலாந்து-தென் ஆப்ரிக்கா கராச்சி

மார்ச் 2 ஏ இந்தியா-நியூசிலாந்து துபாய்

மார்ச் 4 முதல் அரையிறுதி துபாய்

மார்ச் 5 இரண்டாவது அரையிறுதி லாகூர்

மார்ச் 9 பைனல் லாகூர்/துபாய்

* போட்டிகள் இந்திய நேரப்படி மதியம் 2:30 மணிக்கு துவங்கும்.

* அரையிறுதி, பைனலுக்கு 'ரிசர்வ் டே' உண்டு.






      Dinamalar
      Follow us