‘சேட்டன்’ சாம்சன் தொட்டா ‘பவரு’: தெறிக்கவிட்ட இந்தியா ஜோரு
‘சேட்டன்’ சாம்சன் தொட்டா ‘பவரு’: தெறிக்கவிட்ட இந்தியா ஜோரு
ADDED : அக் 23, 2026 02:18 AM

கிறைஸ்ட்சர்ச்: முதல் ‘டி–20’ போட்டி யில் சஞ்சு சாம்சன் ‘சரவெடி’ அரைசதம் விளாச, இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. தொடரில் 1–0 என முன்னிலை பெற்றது.
நியூசிலாந்து சென்று உள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ‘டி–20’ தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி நேற்று கிறைஸ்ட்சர்ச்சில் உள்ள ஹாக்லி ஓவல் மைதானத்தில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற இந்திய கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர், ‘பவுலிங்’ தேர்வு செய்தார்.
பிலிப்ஸ் விளாசல்
நியூசிலாந்து அணிக்கு டிம் செய்பர்ட், ஆலன் நல்ல அடித்தளம் அமைத்தனர். நான்கு ஆண்டு களுக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் பந்துவீசிய புவனேஷ்வர் குமாரின் 2வது ஓவரில் செய்பர்ட் (4, 4, 6) விளாச, 17 ரன் எடுக்கப்பட்டன. செய்பர்ட், 24 ரன்னில் அவுட்டானார். அக்சர் படேல் ‘சுழலில்’ ஆலன் (45) சிக்கினார். டேரில் மிட்சல் (28) நிலைக்கவில்லை. பின் இந்திய பவுலர்களை கிளன் பிலிப்ஸ் பதம் பார்த்தார். 27 பந்தில் அரைசதம் எட்டினார். பெவன் ஜேக்கப்ஸ் (31) ரன் அவுட்டானார். நியூசி லாந்து அணி 20 ஓவரில் 225/4 ரன் குவித்தது. பிலிப்ஸ் (82 ரன், 40 பந்து, 8x4, 3x6), பிரேஸ்வெல் (7) அவுட்டாகாமல் இருந்தனர்.
அதிரடி துவக்கம்
கடின இலக்கை துரத்திய இந்திய அணிக்கு ‘சேட்டன்’ சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா கலக்கல் துவக்கம் தந்தனர். பெர் குசன் ஓவரில் சாம்சன் (4, 6, 4, 5 வைடு) அடித்து நொறுக்க, மொத்தம் 22 ரன் கிடைத்தன. ஆடம் மில்னே வீசிய அடுத்த ஓவரில் அபிஷேக் (4, 5 வைடு, 4, 6, 6) விளாச, மொத்தம் 26 ரன் எடுக்கப் பட்டன. சாம்சன், 23 பந்தில் அரைசதம் எட்டினார்.
முதல் விக்கெட்டுக்கு 5.5 ஓவரில் 93 ரன் குவித்த நிலையில், பிரேஸ்வெல் ‘சுழலில்’ அபிஷேக் (29) வீழ்ந்தார். கேப்டன் சான்ட்னர் பந்தில் சாம்சன் (67 ரன், 33 பந்து, 8x4, 4x6) போல்டானார். முன்னதாக களமிறக்கப்பட்ட திலக் வர்மா (6) சோபிக்க தவறி னார். சான்ட்னர் வலையில் இஷான் கிஷான் (1) சிக்க, 10.3 ஓவரில் இந்தியா 122/4 ரன் எடுத்து தவித்தது.
சபாஷ் நமன் திர்
கடைசி கட்டத்தில் அக்சர் படேல் (24) ஓரளவு கைகொடுத்தார். கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர், நமன் திர் சேர்ந்து அசத்தினர். சான்ட்னர் ஓவரில் ஷ்ரேயஸ் (6, 4, 4) விளாச, போட்டி இந்தியா வசம் வந்தது. ஷ்ரேயஸ், 42 ரன்னுக்கு (28 பந்து, 1x4, 2x6) வெளி யேறினார். கடைசி ஓவரில் இந்திய வெற்றிக்கு 8 ரன் தேவைப்பட்டன. ஹென்றி பந்தை சிக்சருக்கு பறக்கவிட்ட நமன் திர், வெற்றியை உறுதி செய்தார். இந்திய அணி 19.4 ஓவரில் 230/6 ரன் எடுத்து வெற்றி பெற்றது. நமன் திர் (42 ரன், 15 பந்து, 5x4, 2x6), நிதிஷ் குமார் ரெட்டி (2) அவுட்டாகாமல் இருந்தனர்.
இரண்டாவது ‘டி–20’ போட்டி நாளை (அக். 24) கிறைஸ்ட்சர்ச்சில் நடக்க உள்ளது.
சுருக்கமான ஸ்கோர்
நியூசிலாந்து 225/4 (20 ஓவர்)
பேட்டிங்
பிலிப்ஸ் 82(40)
ஆலன் 45(24)
ஜேக்கப்ஸ் 31(16)
பவுலிங்
அர்ஷ்தீப் 1/45(4 ஓவர்)
அக்சர் 1/51(4 ஓவர்)
இந்தியா 230/6 (19.4 ஓவர்)
சாம்சன் 67(33)
ஷ்ரேயஸ் 42(28)
நமன் திர் 42*(15)
பவுலிங்
சான்ட்னர் 2/39 (4 ஓவர்)
பிரேஸ்வெல் 2/37 (4 ஓவர்)
ரிசல்ட்: இந்தியா வெற்றி (4 விக்.,)
