sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 12, 2026 ,மாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

கிரிக்கெட்

/

சென்னை-பெங்களூரு மோதல்: பிரிமியர் லீக் அட்டவணை வெளியீடு

/

சென்னை-பெங்களூரு மோதல்: பிரிமியர் லீக் அட்டவணை வெளியீடு

சென்னை-பெங்களூரு மோதல்: பிரிமியர் லீக் அட்டவணை வெளியீடு

சென்னை-பெங்களூரு மோதல்: பிரிமியர் லீக் அட்டவணை வெளியீடு


ADDED : மார் 11, 2026 09:53 PM

Google News

ADDED : மார் 11, 2026 09:53 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: பிரிமியர் தொடருக்கான முதற்கட்ட அட்டவணை வெளியானது. வரும் ஏப். 5ல் நடக்கும் போட்டியில் சென்னை, பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

பிரிமியர் தொடருக்கான 19வது சீசன், வரும் மார்ச் 28ல் துவங்குகிறது. பைனல், மே 31ல் நடக்கவுள்ளது. மொத்தம் 10 அணிகள், 84 போட்டிகளில் விளையாடுகின்றன. தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருப்பது, மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக வெளிநாட்டு வீரர்களின் பயணத்திட்டத்தை மேற்கொள்ள வசதியாக, முதற்கட்டமாக 20 போட்டிகளுக்கான அட்டவணை மட்டும் வெளியிடப்பட்டது. விரைவில் மீதமுள்ள போட்டிகளுக்கான அட்டவணை வெளியாகும்.

வரும் மார்ச் 28ல் பெங்களூருவில் நடக்கும் முதல் போட்டியில், 'நடப்பு சாம்பியன்' பெங்களூரு அணி, ஐதராபாத் அணியை சந்திக்கிறது. சென்னை அணி, தனது முதல் போட்டியில் ராஜஸ்தானை (மார்ச் 30, இடம்: கவுகாத்தி, அசாம்) எதிர்கொள்கிறது. ஏப். 3ல் சென்னையில் நடக்கும் லீக் போட்டியில் சென்னை, பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. ஏப். 5ல் பெங்களூருவில் நடக்கும் போட்டியில் பெங்களூரு, சென்னை அணிகள் விளையாடுகின்றன. பின், ஏப். 11ல் சென்னையில் நடக்கும் போட்டயில் சென்னை அணி, டில்லியை சந்திக்கிறது.






      Dinamalar
      Follow us