/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
கோவை-திண்டுக்கல் மோதல்: டி.என்.பி.எல்., பைனலில்
/
கோவை-திண்டுக்கல் மோதல்: டி.என்.பி.எல்., பைனலில்
ADDED : ஆக 03, 2024 11:41 PM

சென்னை: டி.என்.பி.எல்., பைனலில் இன்று கோவை, திண்டுக்கல் அணிகள் மோதுகின்றன.
தமிழகத்தில், டி.என்.பி.எல்., 8வது சீசன் நடக்கிறது. இன்று சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் பைனலில் 'நடப்பு சாம்பியன்' கோவை, திண்டுக்கல் அணிகள் மோதுகின்றன.
லீக் சுற்றில் 7 போட்டியில், 6 வெற்றி, ஒரு தோல்வி என 12 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்த கோவை அணி, தகுதிச் சுற்று-1ல் திருப்பூர் அணியை வீழ்த்தி தொடர்ச்சியாக 3வது முறையாக (2022, 2023, 2024) பைனலுக்கு முன்னேறியது. பேட்டிங்கில் சாய் சுதர்சன் (224 ரன்), கேப்டன் ஷாருக்கான் (222), முகிலேஷ் (195) நம்பிக்கை தருகின்றனர். பவுலிங்கில் ஷாருக்கான் (12 விக்கெட்), முகமது (9), சுப்ரமணியன் (8) கைகொடுத்தால் மீண்டும் கோப்பை வெல்லலாம். தவிர, லீக் சுற்றில் திண்டுக்கல் அணியிடம் கண்ட தோல்விக்கு பதிலடி தரலாம்.
அஷ்வின் பலம்:லீக் சுற்றில் 7 போட்டியில், 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 4வது இடம் பிடித்த திண்டுக்கல் அணி, 'எலிமினேட்டர்' போட்டியில் சேப்பாக்கம், தகுதிச் சுற்று-2ல் திருப்பூர் அணிகளை வீழ்த்தி 3வது முறையாக (2018, 2019, 2024) பைனலுக்குள் நுழைந்தது. லீக் போட்டியில் கோவையை வீழ்த்திய உற்சாகத்தில் திண்டுக்கல் அணி உள்ளது.பேட்டிங்கில் ஷிவம் சிங் (360 ரன்), பாபா இந்திரஜித் (254), கேப்டன் அஷ்வின் (200) பலம் சேர்க்கின்றனர். பவுலிங்கில் சந்தீப் வாரியர் (10 விக்கெட்), வருண் சக்கரவர்த்தி (10), அஷ்வின் (9) அசத்தினால் முதன்முறையாக கோப்பை வெல்லலாம்.