/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
மும்பை அணி அசத்தல் வெற்றி: உ.பி., அணி ஏமாற்றம்
/
மும்பை அணி அசத்தல் வெற்றி: உ.பி., அணி ஏமாற்றம்
ADDED : மார் 07, 2024 10:50 PM

டில்லி: பெண்கள் பிரிமியர் லீக் போட்டியில் அசத்திய மும்பை அணி 42 ரன் வித்தியாசத்தில் உ.பி., அணியை வீழ்த்தியது.
இந்தியாவில் பெண்களுக்கான பிரிமியர் லீக் கிரிக்கெட் 2வது சீசன் நடக்கிறது. டில்லியில் நடந்த லீக் போட்டியில் 'நடப்பு சாம்பியன்' மும்பை, உ.பி., அணிகள் மோதின.
'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த மும்பை அணிக்கு யாஸ்திகா பாட்யா (9), ஹேலி மாத்யூஸ் (4) ஏமாற்றினர். பின் இணைந்த நாட் ஸ்கிவர்-பிரன்ட் (45), ஹர்மன்பிரீத் கவுர் (33) ஜோடி நம்பிக்கை தந்தது. அமேலியா கெர், 23 பந்தில் 39 ரன் எடுத்தார். மும்பை அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 160 ரன் எடுத்தது. சஜனா (22) அவுட்டாகாமல் இருந்தார். உ.பி., அணி சார்பில் சமாரி 2 விக்கெட் கைப்பற்றினார்.
சவாலான இலக்கை விரட்டிய உ.பி., அணிக்கு கேப்டன் அலிசா ஹீலி (3), கிரண் நவ்கிரே (7), சமாரி (3) சோபிக்கவில்லை. கிரேஸ் ஹாரிஸ் (15), ஸ்வேதா (17) நிலைக்கவில்லை. பூணம் (7), சோபி எக்லெஸ்டோன் (0), உமா சேத்ரி (8), சைமா (0) ஏமாற்றினர். பொறுப்பாக ஆடிய தீப்தி சர்மா அரைசதம் கடந்தார்.
உ.பி., அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 118 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. தீப்தி (53), ராஜேஷ்வரி (1) அவுட்டாகாமல் இருந்தனர். மும்பை அணி சார்பில் சைகா 3 விக்கெட் கைப்பற்றினர். மும்பை அணி 6 போட்டியில், 4 வெற்றி, 2 தோல்வி என 8 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது. உ.பி., அணி (4 புள்ளி) 4வது இடத்தில் உள்ளது.

