sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

கிரிக்கெட்

/

இளம் ஆஸி., வீரர் மரணம் * கழுத்தில் பந்து தாக்கியதால்...

/

இளம் ஆஸி., வீரர் மரணம் * கழுத்தில் பந்து தாக்கியதால்...

இளம் ஆஸி., வீரர் மரணம் * கழுத்தில் பந்து தாக்கியதால்...

இளம் ஆஸி., வீரர் மரணம் * கழுத்தில் பந்து தாக்கியதால்...


ADDED : அக் 30, 2025 10:57 PM

Google News

ADDED : அக் 30, 2025 10:57 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மெல்போர்ன்: பயிற்சியின் போது பந்து கழுத்தில் தாக்கியதால் இளம் வீரர் பென், மரணம் அடைந்தார்.

ஆஸ்திரேலியாவின் 17 வயது கிரிக்கெட் வீரர் பென் ஆஸ்டின். பெர்ன்ட்ரீ கல்லி, ராவ்வில்லே, எடிசன் பார்க் கிளப் அணிகளுக்காக விளையாடினார்.

'டி-20' போட்டிக்கு தயாராகும் வகையில், மெல்போர்னின் கிழக்கு புறநகர் பகுதியில் உள்ள பெர்ன்ட்ரீ கல்லி மைதானத்தில் சக வீரர்களுடன் இணைந்து, கடந்த அக். 28ல் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டார்.

அப்போது 'த்ரோ டவுன்' முறையில் சக வீரர் ஒருவர் வீசிய பந்தை எதிர்கொண்டார் பென். தலையில் 'ஹெல்மெட்' அணிந்திருந்த போதும், பந்து கழுத்து, தலைப் பகுதியில் பலமாக தாக்கியது. உடனடியாக மயங்கி சரிந்த இவரை, உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இங்கு 'வென்டிலேட்டர்' பொருத்தப்பட்டு சிகிச்சை தரப்பட்டது. எனினும், இரண்டு நாள் சிகிச்சை பலன் தராத நிலையில், பென், மரணம் அடைந்தார்.

பென் தந்தை ஜேஸ் ஆஸ்டின் சார்பாக, விக்டோரியா கிரிக்கெட் போர்டு வெளியிட்ட செய்தி:

எங்கள் குடும்பம், நண்பர்களின் ஒளி விளக்காக இருந்தார் பென். அவரது வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சியான விஷயமாக இருந்த கிரிக்கெட்டை, அதிகம் நேசித்தார். துரதிருஷ்டவசமான சம்பவம், பென்னை எங்களிடம் இருந்து பறித்து விட்டது.

பென்னுக்கு வலைப்பயிற்சியில் பந்து வீசிய சக வீரரை, எதிர்பாராமல் நடந்த இந்த விபத்து அதிகம் பாதித்து இருக்கும். அவருக்கு என்றும் ஆதரவாக இருப்போம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கால்பந்து வீரர்

பென் துவக்கத்தில் கால்பந்து வீரராக இருந்தார். ஹாக்ஸ் ஜூனியர் கால்பந்து கிளப் அணிக்காக 100க்கும் மேற்பட்ட போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.

* பிரிமியர் கால்பந்து தொடர் பைனலில், பவுண்டரி நடுவராக தேர்வு செய்யப்பட்டார்.

மாற்றம் வருமா

கடந்த 2014ல் ஆஸ்திரேலிய வீரர் பிலிப் ஹியுஸ், காதின் பின் பக்கத்தில் பந்து தாக்கியதால் மரணம் அடைந்தார். இதையடுத்து, கழுத்தை பாதுகாக்கும் வகையில் 'ஸ்டெம் கார்டு' பொருத்தப்பட 'ஹெல்மெட்' பயன்பாட்டுக்கு வந்தது. பென் சாதாரண 'ஹெல்மெட்' அணிந்திருந்ததால், பந்து தாக்கியது. இதனால், அனைத்து வித கிரிக்கெட்டிலும், கூடுதல் பாதுகாப்பு தரும் வகையிலான 'ஹெல்மெட்' கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என மாற்றம் கொண்டு வரப்படலாம்.

அஞ்சலி

பென் வலைப்பயிற்சியில் ஈடுபட்ட மைதானத்தில் கிரிக்கெட் பேட், பூக்கள் வைத்து ரசிகர்கள் அஞ்சலி செலுத்தினர்.

நினைவுகளுடன்...

பந்து தாக்கியதால் மரணம் அடைந்த பிலிப் ஹியுஸ் குடும்பத்தினர் வெளியிட்ட செய்தியில்,' எங்களது நினைவுகள் எப்போதும் உங்களுடன் இருக்கும். சோகமான நிலையில் இருக்கும் பென் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்,' என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தொடரும் சோகம்

மெல்போர்னில், பயிற்சியின் போது கழுத்தில் பந்து தாக்கியதில் இளம் ஆஸ்திரேலிய வீரர் பென் ஆஸ்டின் 17, சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். இதற்கு முன் கிரிக்கெட் அரங்கில் நிகழ்ந்த சில மரணங்கள்...

* பிலிப் ஹியூஸ், ஆஸி.,: அடிலெய்டில் நடந்த ஷெப்பீல்டு ஷீல்டு போட்டியில் (2014, நவ. 27), சியான் அபாட் வீசிய பந்து கழுத்தில் தாக்கியதில் பிலிப் ஹியூஸ் மரணமடைந்தார்.

* டேரின் ராண்டால், தெ.ஆப்.,: தென் ஆப்ரிக்காவில் நடந்த உள்ளூர் போட்டியில் (2013, அக். 27, ஈஸ்டர்ன் கேப்), 'புல் ஷாட்' அடிக்க முயன்ற போது பந்து தலையில் பலமாக தாக்கியதில் டேரின் ராண்டால் உடனடியாக மரணமடைந்தார்.

* ராமன் லம்பா, இந்தியா: வங்கதேசத்தில் நடந்த உள்ளூர் போட்டியில் (1998, பிப். 23, தாகா) 'பீல்டிங்' செய்த போது பந்து தலையில் தாக்கியதில் 'கோமா' நிலைக்கு தள்ளப்பட்டார் ராமன் லம்பா. மூன்று நாட்களுக்கு பின், சிகிச்சை பலனின்றி காலமானார்.

* மார்டின் பெட்கோபர், ஆஸி.,: பிரிஸ்பேனில் நடந்த கிளப் போட்டியில் (1975, டிச. 13) 'பேட்டிங்' செய்த போது எதிரணி வீரர் வீசிய பந்து மார்டின் பெட்கோபரின் இதயத்தில் பலமாக தாக்கியதில் மரணமடைந்தார்.

* மேக்ஸ் ஸ்மித், ஆஸி.,: மெல்போர்னில் நடந்த போட்டியில் (1941, அக். 27) தனது சகோதரர் கிளைவ் ஸ்மித் வீசிய பந்து தலையில் தாக்கியதில் மேக்ஸ் ஸ்மித் காலமானார்.

* வில்லியம் கிரிப்பித்ஸ், ஆஸி.,: மெல்போர்னில் நடந்த பயிற்சியில் (1928, அக். 16) 'கேட்ச்' செய்ய முயன்ற போது பந்து தலையில் தாக்கியதில் வில்லியம் ஜான் கிரிப்பித்ஸ் மரணமடைந்தார்.






      Dinamalar
      Follow us