தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/அபிஷேக் விளாசல்... இந்தியா அசத்தல்: ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது

அபிஷேக் விளாசல்... இந்தியா அசத்தல்: ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது

அபிஷேக் விளாசல்... இந்தியா அசத்தல்: ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது

1


ADDED : செப் 13, 2026 11:49 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 13, 2026 11:49 PM

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: முதல் 'டி-20' போட்டியில் அபிஷேக் சர்மா 82 ரன் விளாச, இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் சுலபமாக வென்றது.

இந்தியா வந்துள்ள ஆப்கானிஸ்தான் அணி 3 'டி-20' போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி நேற்று டில்லி, அருண் ஜெட்லி மைதானத்தில் நடந்தது. இந்திய 'லெவனில்' 15 வயது வைபவ் சூர்யவன்ஷி இடம் பெறவில்லை. சஞ்சு சாம்சன் வாய்ப்பு பெற்றார். 'டாஸ்' வென்ற கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர், 'பவுலிங்' தேர்வு செய்தார்.

இந்திய அணியின் அபார பந்துவீச்சில் ஆப்கானிஸ்தான் அதிர்ந்தது. பும்ரா வீசிய முதல் ஓவரில் குர்பாஸ் (0) வெளியேறினார். 7 ஓவரில் 43/5 ரன் எடுத்து தவித்தது. கடைசி கட்டத்தில் நபி (33), அஸ்மதுல்லா ஓமர்சாய் (64) கைகொடுக்க, ஆப்கானிஸ்தான் 20 ஓவரில் 156/8 ரன் எடுத்தது.

இந்தியா சார்பில் அர்ஷ்தீப் சிங், 3 விக்கெட் சாய்த்தார்.

அபிஷேக் 'சரவெடி'

சுலப இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு சாம்சன் (10) ஏமாற்றினார். பின் 22 பந்தில் அரைசதம் எட்டிய அபிஷேக் சர்மா (82 ரன், 32 பந்து, 7X4, 7X6), இஷான் கிஷான் (42) வெளுத்து வாங்கினர். இந்திய அணி 13.4 ஓவரில் 157/3 ரன் எடுத்து மின்னல் வேக வெற்றி பெற்றது. கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் (8), திலக் வர்மா (3) அவுட்டாகாமல் இருந்தனர்.

முதல் முறையாக

வந்தே மாதரம்...

இந்திய விளையாட்டு அரங்கில் முதல் முறையாக நேற்று போட்டி துவங்கும் முன், டில்லி அருண் ஜெட்லி மைதானத்தில் தேசிய பாடல் வந்தே மாதரம் (3 நிமிடம், 10 வினாடி) முழுமையாக இசைக்கப்பட்டது. அடுத்து, தேசிய கீதம் (52 வினாடி) இசைக்கப்பட்டது. இந்திய வீரர்கள் அனைவரும் மொத்தம் 4 நிமிடம், 2 வினாடி பாடினர்.

பும்ரா 350 விக்.,

குர்பாசை அவுட்டாக்கிய பும்ரா, ஒட்டுமொத்த 'டி-20' அரங்கில் 350 விக்கெட் (284 போட்டி) வீழ்த்திய 3வது இந்திய பவுலரானார். முதல் இரு இடங்களில் சஹால் (396), புவனேஷ்வர் குமார் (363) உள்ளனர்.

* நேற்று கேப்டனாக 11வது 'டி-20' போட்டியில் களமிறங்கிய ஷ்ரேயஸ் ஐயர், 10வது முறை 'டாஸ்' வென்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us