தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/முழுமையாக வெல்லுமா இந்தியா * சென்னையில் இன்று ஆப்கனுடன் மோதல்

முழுமையாக வெல்லுமா இந்தியா * சென்னையில் இன்று ஆப்கனுடன் மோதல்

முழுமையாக வெல்லுமா இந்தியா * சென்னையில் இன்று ஆப்கனுடன் மோதல்


ADDED : ஜூன் 19, 2026 11:50 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 19, 2026 11:50 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: இந்தியா வந்துள்ள ஆப்கானிஸ்தான் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டியில் வென்ற இந்தியா, 2--0 என ஏற்கனவே தொடரை கைப்பற்றி முன்னிலையில் உள்ளது. இன்று, மூன்றாவது போட்டி சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவுள்ளது. இதில் இந்திய அணி வெற்றி பெற்றால் 3-0 என தொடரை முழுமையாக கைப்பற்றி கோப்பை வெல்லலாம்.

பேட்டிங்கில் இந்திய அணிக்கு கேப்டன் சுப்மன் கில் (238 ரன்) நம்பிக்கை தருகிறார். கடந்த போட்டியில் சதம் விளாசிய சுப்மன் கில், இஷான் கிஷான் மீண்டும் கைகொடுக்கலாம். சீனியர் ரோகித் சர்மாவுடன், இரண்டாவது போட்டியில் ஏமாற்றிய ஜெய்ஸ்வால் ரன் மழை பொழிந்தால் நல்ல துவக்கம் கிடைக்கும். 'மிடில்-ஆர்டரில்' ஷ்ரேயஸ் ஐயர், கே.எல். ராகுல், வாஷிங்டன் சுந்தர் அசத்தினால் இமாலய ஸ்கோரை பெறலாம்.

'வேகத்தில்' குர்னுார் பிரார் (6 விக்கெட்), அர்ஷ்தீப் சிங் (5) கூட்டணி மிரட்டுகிறது. இவர்களுக்கு பிரின்ஸ் யாதவ் ஒத்துழைப்பு தந்தால் நல்லது. 'சுழலில்' ஹர்ஷ் துபே (3) ஆறுதல் தருகிறார். நிதிஷ் குமார் ரெட்டிக்கு பதிலாக 'ஆல்-ரவுண்டர்' ஹர்ஷித் ராணா இடம் பெறலாம்.

ஆப்கானிஸ்தான் அணிக்கு பேட்டிங்கில் குர்பாஸ் (143 ரன்), ரஹ்மத் ஷா (82) ஆறுதல் தருகின்றனர். செதிகுல்லா அடல், கேப்டன் ஹஷ்மதுல்லா ஷஹிதி கைகொடுக்கலாம். பவுலிங்கில் கரோட் (4 விக்கெட்), ரஷித் கான் (4), ஜியா உர் ரஹ்மான் (1) நம்பிக்கை தருகின்றனர்.



மழை வருமா

சென்னையில் இன்று மழைக்கு 57 சதவீதம் வாய்ப்பு உண்டு.

* சேப்பாக்க மைதான ஆடுகளம் சுழலுக்கு சாதகமாக இருக்கும்.

* இரு அணிகளும் 6 முறை மோதின. இந்தியா 5ல் வென்றது. ஒரு போட்டி 'டை' ஆனது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us