தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/ 'பேபி பாஸ்' வைபவா...'சேட்டன்' சாம்சனா: இந்திய அணியில் யாருக்கு வாய்ப்பு

'பேபி பாஸ்' வைபவா...'சேட்டன்' சாம்சனா: இந்திய அணியில் யாருக்கு வாய்ப்பு

'பேபி பாஸ்' வைபவா...'சேட்டன்' சாம்சனா: இந்திய அணியில் யாருக்கு வாய்ப்பு


ADDED : செப் 12, 2026 11:37 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 12, 2026 11:37 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: முதல் 'டி-20' சவாலில் இடம் பிடிக்க, சஞ்சு சாம்சன், வைபவ் சூர்யவன்ஷி இடையே பலத்த போட்டி காணப்படுகிறது.

இந்தியா வந்துள்ள ஆப்கானிஸ்தான் அணி 3 போட்டிகள் (செப். 13, 15, 17, டில்லி, அருண் ஜெட்லி மைதானம்) கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது.

ஆப்கனுக்கு உதவி

இத்தொடர் ஆப்கானிஸ்தானில் நடக்க வேண்டும். அங்கு பாதுகாப்பு இல்லாததால், நட்பு அடிப்படையில் இந்தியாவில் நடக்கிறது. போட்டி ஒளிபரப்பு, டிக்கெட் உட்பட அனைத்து வருமானமும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் போர்டுக்கு வழங்கப்படும்.

இஷான் காயம்

இந்திய அணித் தேர்வில் குழப்பம் நிலவுகிறது. துவக்கத்தில் அனுபவ சஞ்சு சாம்சன்-அபிஷேக் சர்மா களமிறங்குவது வழக்கம். ஆனால், 15 வயது 'பேபி பாஸ்' வைபவ் சூர்யவன்ஷி வரவு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. முதல் பந்தில் இருந்தே விளாசும் இவரை சேர்க்க வேண்டும் என்ற குரல் எழுந்துள்ளது. இதனால் 'சேட்டன்' சாம்சன் நீக்கப்படலாம். பயிற்சியின் போது, இஷான் கிஷானுக்கு முதுகு பகுதியில் லேசான பிடிப்பு ஏற்பட்டது. இஷான் இடம் பெறாத பட்சத்தில், வைபவ், சாம்சன் என இருவரும் விளையாடும் 'லெவனில்' வாய்ப்பு பெறலாம். கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர், திலக் வர்மா, ஷிவம் துபே, நிதிஷ் குமார் என 'பேட்டிங்' வலுவாக உள்ளது.

வருகிறார் பும்ரா

வேகப்பந்துவீச்சில் பும்ரா, அர்ஷ்தீப் சிங் இருப்பதால், யாஷ் தாகூர் இடம் பெறுவது சந்தேகம். 'சுழலில்' அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், வருண் சக்ரவர்த்தி அசத்தலாம்.

ஆப்கானிஸ்தான் அணிக்கு கேப்டன் ஜத்ரன், குர்பாஸ், ஓமர்சாய் பலம் சேர்க்கின்றனர். சுழற்பந்துவீச்சில் அனுபவ ரஷித் கான், நபி, நுார் அகமது, முஜீப் உர் ரஹ்மான் கைகொடுக்கலாம்.

கட்டுப்பாடு

'பிரிக்ஸ்' அமைப்பின் மாநாடு நடப்பதால், இன்றைய 'டி-20' போட்டியை ஒத்திவைக்கும்படி டில்லி போக்குவரத்து போலீசார் வலியுறுத்தினர். இதை டில்லி கிரிக்கெட் சங்கம் ஏற்கவில்லை. இதனால் போக்குவரத்து தொடர்பாக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ரசிகர்கள் முன்னதாகவே மைதானத்திற்கு வர வேண்டும், குறிப்பிட்ட இடங்களில் தான் வாகனங்களை 'பார்க்கிங்' செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மழை வருமா

இரு அணிகளும் 9 'டி-20' போட்டிகளில் மோதின. இந்தியா 8ல் வென்றது. ஒரு போட்டிக்கு முடிவு இல்லை.

* டில்லியில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு உண்டு.

* டில்லி ஆடுகளம் துவக்கத்தில் பவுலர்களுக்கு உதவும். மைதான பவுண்டரி அளவு சிறியது என்பதால், எளிதாக ரன் எடுக்கலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us