ஹர்ஷ் துபே, படிக்கல் வாய்ப்பு * ஆப்கானிஸ்தான் டெஸ்டில்...
ஹர்ஷ் துபே, படிக்கல் வாய்ப்பு * ஆப்கானிஸ்தான் டெஸ்டில்...
ADDED : ஏப் 21, 2026 10:59 PM

புதுடில்லி: ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி வரும் ஜூன் மாதம் இந்தியா வருகிறது. இங்கு ஜூன் 6-10ல் புதிய சண்டிகரில் நடக்கவுள்ள ஒரு டெஸ்ட் போட்டியில் பங்கேற்கிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் இது இடம் பெறாது.
அடுத்து இந்திய மண்ணில், 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. மூன்றாவது, கடைசி ஒருநாள் போட்டி, சென்னையில் ஜூன் 20ல் நடக்கும்.
இத்தொடருக்குப் பின் இந்திய அணி, இங்கிலாந்து செல்லவுள்ளது. இதனால் டெஸ்ட் போட்டியில் இருந்து கேப்டன் சுப்மன் கில், பும்ரா உள்ளிட்ட சீனியர் வீரர்களுக்கு ஓய்வு தர இந்திய கிரிக்கெட் போர்டு முடிவு செய்துள்ளது.
இவர்களுக்குப் பதில், உள்ளூர் ரஞ்சி போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட குர்னுார் பிரார், மானவ் சுதர், ஹர்ஷ் துபே, தேவ்தத் படிக்கல் உள்ளிட்டோருக்கு இந்திய டெஸ்ட் அணியில் களமிறங்க வாய்ப்பு தருவது குறித்து விவாதம் நடந்து வருகிறது.
இதுகுறித்து வெளியான செய்தியில்,'' ஆப்கானிஸ்தான் டெஸ்ட், உலக சாம்பியன்ஷிப் பட்டியலில் இல்லை. இந்நிலையில் சீனியர் வீரர்களை இதில் பங்கேற்க வைப்பதில் எவ்வித அர்த்தமும் இல்லை,' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
