ADDED : டிச 13, 2024 11:22 PM

ஹராரே: ஜிம்பாப்வே சென்றுள்ள ஆப்கானிஸ்தான் அணி, மூன்று போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் ஜிம்பாப்வே வென்றது. நேற்று இரண்டாவது போட்டி ஹராரேயில் நடந்தது.
'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த ஆப்கானிஸ்தான் அணிக்கு ரஹ்மானுல்லா (11), சேடிகுல்லா (18) ஜோடி சுமார் துவக்கம் தந்தது. டார்வஸ் ரசூலி, 42 பந்தில் 58 ரன் எடுத்து கைகொடுத்தார். அஸ்மதுல்லா (28), குல்பதீன் (26) கைகொடுத்தனர். ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 153 ரன் எடுத்தது.
ஜிம்பாப்வே அணிக்கு பிரைன் பென்னெட் (27) உதவ 'மிடில் ஆர்டரில்' மருமானி (5), மையர்ஸ் (4), வெஸ்லே (4) என மூவரும் ஒற்றை இலக்கில் திரும்பினர். கேப்டன் சிக்கந்தர் ராஜா, 35 ரன் எடுத்தார்.
ஜிம்பாப்வே அணி 17.4 ஓவரில் 103 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ரஷித் கான், நவீன் உல் ஹக் தலா 3, முஜீப் 2 விக்கெட் சாய்த்தனர். ஆப்கானிஸ்தான் அணி 50 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

