தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/வருமா ஆப்ரிக்கா-ஆசிய கோப்பை * 17 ஆண்டுக்குப் பின் மீண்டும்...

வருமா ஆப்ரிக்கா-ஆசிய கோப்பை * 17 ஆண்டுக்குப் பின் மீண்டும்...

வருமா ஆப்ரிக்கா-ஆசிய கோப்பை * 17 ஆண்டுக்குப் பின் மீண்டும்...


ADDED : நவ 05, 2024 11:33 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 05, 2024 11:33 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெனோனி: ஆசியா, ஆப்ரிக்க அணிகளின் வீரர்கள் இரு அணிகளாக பிரிக்கப்பட்டு, 3 போட்டி கொண்ட ஆப்ரோ-ஆசிய கிரிக்கெட் ஒருநாள் தொடர் நடத்தப்பட்டது. 2005ல் நடந்த முதல் தொடரில் ஆசிய அணிக்கு பாகிஸ்தானின் இன்சமாம் கேப்டனாக இருந்தார். இதில் டிராவிட், கும்ளே, நெஹ்ரா இடம் பெற்றனர். இத்தொடர் 1-1 என சமன் ஆனது.

2007ல் ஆசிய அணியில் தோனி, கங்குலி, ஹர்பஜன், ஜாகிர் கான், யுவராஜ் சிங், சேவக், சச்சின், முகமது ஆசிப், முகமது யூசுப், சோயப் அக்தர் இடம் பிடித்தனர். இத்தொடரை ஆசிய அணி 3-0 என வென்றது. 2009ல் கென்யாவில் நடக்க இருந்த தொடர் ரத்தானது.

தற்போது மீண்டும் ஆப்ரோ-ஆசிய தொடரை நடத்த வேண்டும் என ஆப்ரிக்க கிரிக்கெட் சங்கம் (ஏ.சி.ஏ.,), ஆசிய கிரிக்கெட் சங்கத்துடன் (ஏ.சி.சி.,) பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இதனால் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை அணி வீரர்கள் ஒரே அணியாக விளையாடலாம்.

ஏ.சி.ஏ., தற்காலிக சேர்மன் டவெங்வா முகுலானி கூறுகையில்,'' ஆப்ரோ-ஆசிய கோப்பை தொடர் காரணமாக அனைத்து போர்டுகளுக்கும் தேவையான நிதி வசதி கிடைக்கும். ஏ.சி.சி.,யுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். தவிர ஐ.பி.எல்., போல, ஆப்ரிக்க பிரிமியர் லீக் தொடர் நடத்தவும் முயற்சி நடக்கின்றன,'' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us