உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : மே 07, 2026 11:13 PM

அ நிறம் | அளவு
சண்டிகர்: இந்திய அணி முன்னாள் வீரர் அமன்பிரீத் சிங் கில். பஞ்சாப்பை சேர்ந்த இவர், 19 வயதுக்குட்பட்ட இந்திய அணிக்காக, யுவராஜ் சிங், கோலியுடன் இணைந்து விளையாடியுள்ளார். யூத் அரங்கில் ஒருநாள், டெஸ்ட் (3 நாள்) போட்டிகளில் பங்கேற்றுள்ளார். வேகப்பந்து வீச்சாளர் ஆன அமன்பிரீத், 2006-2008ல் 6 முதல் தர போட்டிகளில் விளையாடினார்.
கடந்த 2008ல் முதன் முதலில் நடந்த கிரிக்கெட் லீக் தொடரில் பஞ்சாப் அணிக்காக விளையாடினார். 36 வயதான இவர், திடீரென மரணம் அடைந்தார். இதற்கான காரணம் தெரியவில்லை.
கோலி வெளியிட்ட செய்தியில்,'அமன்பிரீத் மரணம் அதிர்ச்சியாகவும், சோகமாகவும் உள்ளது,' என தெரிவித்துள்ளார்.
யுவராஜ் கூறுகையில்,' எங்களுடன் 'டிரசிங் ரூமை' பகிர்ந்து கொண்டவர் அமன்பிரீத். கிரிக்கெட்டை நேசித்தவர்,' என்றார்.
