/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
அஷ்வின் விலகல் ஏன் * 'பிக் பாஷ்' தொடரில் இருந்து...
/
அஷ்வின் விலகல் ஏன் * 'பிக் பாஷ்' தொடரில் இருந்து...
அஷ்வின் விலகல் ஏன் * 'பிக் பாஷ்' தொடரில் இருந்து...
அஷ்வின் விலகல் ஏன் * 'பிக் பாஷ்' தொடரில் இருந்து...
ADDED : நவ 04, 2025 10:50 PM

சென்னை: முழங்கால் காயத்திற்கு ஆப்பரேஷன் செய்ததால் 'பிக் பாஷ்' தொடரில் இருந்து விலகினார் அஷ்வின்.
இந்திய அணி முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் 39. கடந்த ஆண்டு சர்வதேச அரங்கில் இருந்து ஓய்வு பெற்ற இவர், பிரிமியர் அரங்கிலும் விடைபெற்றார். இங்கிலாந்தின் 'தி ஹண்டிரடு', தென் ஆப்ரிக்காவின் 'எஸ்.ஏ.20' உட்பட, உலகின் பல்வேறு இடங்களில் நடக்கும் உள்ளூர் 'டி-20' தொடர்களில் பங்கேற்க கவனம் செலுத்தி வந்தார்.
ஆஸ்திரேலியாவின் 'பிக் பாஷ்' தொடரில் சிட்னி தண்டர் அணிக்காக ஒப்பந்தம் ஆகி இருந்தார். இதன் 15வது சீசன், வரும் டிச. 15--2026, ஜன. 26 வரை நடக்க உள்ளது. தற்போது இத் தொடரில் இருந்து அஷ்வின் விலகினார்.
அஷ்வின் வெளியிட்ட செய்தியில்,' ஆஸ்திரேலிய மண்ணில் 'பிக் பாஷ்' தொடரில் பங்கேற்க எதிர்பார்ப்புடன் காத்திருந்தேன். சென்னையில் பயிற்சியில் ஈடுபட்ட போது, எனது முழங்காலில் காயம் ஏற்பட்டது. 'ஆப்பரேஷன்' செய்யப்பட்டுள்ளது. தற்போது மீண்டு வருகிறேன். 'பிக் பாஷ்' தொடரில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது,' என தெரிவித்துள்ளார்.
இதே போல, ஹாங்காங் சிக்சஸ் தொடரில் அஷ்வினுக்குப் பதில் ராபின் உத்தப்பா விளையாட உள்ளார்.

