தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/அரையிறுதியில் வங்கதேசம்: ஆசிய கோப்பை 'டி-20'ல்

அரையிறுதியில் வங்கதேசம்: ஆசிய கோப்பை 'டி-20'ல்

அரையிறுதியில் வங்கதேசம்: ஆசிய கோப்பை 'டி-20'ல்


ADDED : செப் 08, 2026 11:24 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 08, 2026 11:24 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

துபாய்: ஆசிய கோப்பை அரையிறுதிக்கு வங்கதேச அணி முன்னேறியது.

துபாயில் பெண்களுக்கான ஆசிய கோப்பை, 'டி-20' தொடர் நடக்கிறது. நேற்று நடந்த கடைசி லீக் போட்டியில் 'பி' பிரிவில் இடம் பெற்றிருந்த வங்கதேசம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற எமிரேட்ஸ் அணி பீல்டிங் தேர்வு செய்தது.

வங்கதேச அணிக்கு திலாரா, ஜுவைரியா ஜோடி துவக்கம் கொடுத்தது. சுரக்சா வீசிய முதல் ஓவரின் மூன்றாவது பந்தில் திலாரா 'டக்' அவுட்டானார். தொடர்ந்து அசத்திய இவர், தனது அடுத்த ஓவரில் சோபனாவை (3) வெளியேற்றினார்.

ஜுவைரியா (12), கேப்டன் நிகர் சுல்தானா (24) ஆறுதல் தந்தனர். ஷர்மின் (38) கைகொடுக்க, வங்கதேச அணி, 20 ஓவரில், 103/7 ரன் எடுத்தது.

எமிரேட்ஸ் அணிக்கு கேப்டன் ஈஷா (2), சமைரா (8), ரினிதா (5), தீர்த்தா (11), லாவன்யா (1) ஏமாற்றினர். எமிரேட்ஸ் அணி 20 ஓவரில் 69/9 ரன் மட்டும் எடுத்து, 34 ரன்னில் தோற்றது. 3 போட்டியில் 2 வெற்றி பெற்ற வங்கதேச அணி (4 புள்ளி) பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்து, அரையிறுதிக்கு முன்னேறியது.

அரையிறுதி அட்டவணை

தேதி அணிகள்

செப். 10 இந்தியா-வங்கதேசம்

செப். 11 இலங்கை-பாக்.,

* போட்டிகள் இந்திய நேரப்படி இரவு 8:00 மணிக்கு, துபாயில் துவங்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us