/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
சதம் விளாசினார் துருவ் ஜுரல் * இந்திய 'ஏ' அணி பதிலடி
/
சதம் விளாசினார் துருவ் ஜுரல் * இந்திய 'ஏ' அணி பதிலடி
சதம் விளாசினார் துருவ் ஜுரல் * இந்திய 'ஏ' அணி பதிலடி
சதம் விளாசினார் துருவ் ஜுரல் * இந்திய 'ஏ' அணி பதிலடி
ADDED : செப் 18, 2025 11:13 PM

லக்னோ: லக்னோ போட்டியில் துருவ் ஜுரல் சதம் விளாச, இந்திய 'ஏ' 403/4 ரன் குவித்து பதிலடி கொடுத்தது.
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய 'ஏ' அணி, அதிகாரப்பூர்வமற்ற இரண்டு டெஸ்ட் (தலா நான்கு நாள்) போட்டி கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி லக்னோவில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய 'ஏ' அணி 532/6 ரன் எடுத்து 'டிக்ளேர்' செய்தது. இரண்டாவது நாள் முடிவில் இந்திய 'ஏ' அணி முதல் இன்னிங்சில் 116/1 ரன் எடுத்திருந்தது. ஜெகதீசன் (50), சாய் சுதர்சன் (20) அவுட்டாகாமல் இருந்தனர்.
நேற்று மூன்றாவது நாள் ஆட்டம் நடந்தது. ஜெகதீசன் 64 ரன் எடுத்த நிலையில் பார்ட்லெட் பந்தில் வீழ்ந்தார். மறுபக்கம் தன் பங்கிற்கு அரைசதம் அடித்தார் சாய் சுதர்சன். இவர் 73 ரன் எடுத்து, கன்னோலி பந்தில் அவுட்டானார். கேப்டன் ஷ்ரேயஸ், 8 ரன்னில் வெளியேறினார்.
சூப்பர் ஜோடி
அடுத்து இணைந்த தேவ்தத் படிக்கல், துருவ் ஜுரல் ஜோடி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. படிக்கல் அரைசதம் அடித்தார். இவருக்கு கைகொடுத்த துருவ் ஜுரல், சதம் விளாசினார். மழை காரணமாக மூன்றாவது நாளில் 73 ஓவர்கள் மட்டும் வீசப்பட்டன. முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 403/4 ரன் குவித்து, 129 ரன் பின்தங்கி இருந்தது.
5வது விக்கெட்டுக்கு 181 ரன் எடுத்த நிலையில், படிக்கல் (86), துருவ் ஜுரல் (113) அவுட்டாகாமல் இருந்தனர். இன்று கடைசி நாள் ஆட்டம் நடக்க உள்ளது. முதல் இன்னிங்ஸ் கூட முடியாத நிலையில் போட்டி 'டிரா' ஆகலாம்.