தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/இந்திய 'ஏ' அணி வெற்றி

இந்திய 'ஏ' அணி வெற்றி

இந்திய 'ஏ' அணி வெற்றி


UPDATED : செப் 25, 2026 11:15 PM

ADDED : செப் 24, 2026 11:05 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 25, 2026 11:15 PM ADDED : செப் 24, 2026 11:05 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: அதிகாரப்பூர்வமற்ற முதல் டெஸ்டில் இந்திய 'ஏ' அணி, 162 ரன் வித்தியாசத்தில், ஆஸ்திரேலிய 'ஏ' அணியை வென்றது.

புதுச்சேரியில், இந்தியா 'ஏ', ஆஸ்திரேலிய 'ஏ' அணிகள் மோதிய அதிகாரப்பூர்வமற்ற முதல் டெஸ்ட் (4 நாள்) நடந்தது. முதல் இன்னிங்சில் இந்திய 'ஏ' அணி 334, ஆஸ்திரேலிய 'ஏ' அணி 171 ரன் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் இந்திய 'ஏ' அணி 199 ரன் எடுத்தது.

இரண்டாவது இன்னிங்சில் 363 ரன் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய ஆஸ்திரேலிய 'ஏ' அணி, மூன்றாவது நாள் முடிவில் 55/2 ரன் எடுத்து, 307 ரன் பின்தங்கி இருந்தது.

நேற்று கடைசி நாள் ஆட்டம் நடந்தது. நாதன் மெக்ஸ்வீனி ((35), கேப்டன் ஹேண்ட்ஸ்கோம்ப் (16), ஜேசன் (26) சீரான இடைவெளியில் திரும்பினர். பெர்கஸ் 47 ரன் (52 பந்து) ரன் எடுத்தார். ஆஸ்திரேலிய 'ஏ' அணி இரண்டாவது இன்னிங்சில் 200 ரன்னில் ஆல் அவுட்டானது. இந்தியா சார்பில் தேஷ்பாண்டே 3, ஷாம்ஸ் முலானி 3, அன்ஷுல் 2, தனுஷ் 2 விக்கெட் சாய்த்தனர். தொடரில் இந்தியா 'ஏ' 1-0 என முன்னிலை பெற்றது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us