/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
பிராட்மேன் தொப்பி ரூ. 2.93 கோடி
/
பிராட்மேன் தொப்பி ரூ. 2.93 கோடி
ADDED : ஜன 27, 2026 09:54 PM

கோல்டு கோஸ்ட்: பிராட்மேன் பயன்படுத்திய தொப்பி ரூ. 2.93 கோடிக்கு ஏலம் போனது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் மறைந்த பிராட்மேன். டெஸ்டில் இவரது ரன் சராசரி 99.94 ஆக இருந்தது. கடந்த 1947-48ல் இந்திய அணி சுதந்திரம் அடைந்த பின் முதன் முறையாக ஆஸ்திரேலியா சென்றது.
இந்தியாவின் ரங்கா சொஹோனி, முதல் பந்து வீசினார். சொந்தமண்ணில் பிராட்மேன் பங்கேற்ற, இந்தியாவுக்கு எதிரான கடைசி தொடர் இது. இதில் இந்திய அணி 0-4 என தோற்றது.
இத்தொடரில் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி வீரர்கள் அணியும் பச்சை நிற தொப்பியை, பிராட்மேன், ரங்காவிடம் வழங்கினார். இதை ரங்கா குடும்பத்தினர், பொதுவெளியில் தெரிவிக்காமல் 75 ஆண்டுகளாக பாதுகாத்து வந்தனர்.
'கிரிக்கெட்டின் புனிதப் பரிசு' என போற்றப்பட்ட இத்தொப்பி ஏலம் விடப்பட்டது. பெயர் தெரிவிக்காத ஒருவர், ரூ. 2.93 கோடிக்கு வாங்கினார். பிராட்மேனின் 11 தொப்பியில், 2 ஆஸ்திரேலிய அரசிடம், 9 தனியாரிடம் உள்ளன.

