UPDATED : ஜூலை 05, 2025 11:05 PM
ADDED : ஜூலை 04, 2025 10:57 PM

செயின்ட் ஜார்ஜ்: வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள ஆஸ்திரேலிய அணி 3 டெஸ்டில் பங்கேற்கிறது. இரண்டாவது டெஸ்ட் செயின்ட் ஜார்ஜ் மைதானத்தில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 286 ரன் எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பிரண்டன் கிங் அரைசதம் அடித்தார். ஷாய் ஹோப் (21) கம்மின்ஸ் 'வேகத்தில்' போல்டானார். பிரண்டன் கிங் 75 ரன் எடுத்த நிலையில் லியான் சுழலில் சிக்கினார்.
பின் வரிசையில் அல்ஜாரி ஜோசப் (27), ஷமார் ஜோசப் (29) அணியின் ஸ்கோரை உயர்த்த உதவினர். வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 253 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. லியான் 3 விக்கெட் கைப்பற்றினார். ஆஸ்திரேலியா 33 ரன் முன்னிலை பெற்றது.
அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு ஜேடன் சீலஸ் 'ஷாக்' கொடுத்தார். முதல் ஓவரில் கான்ஸ்டாசை 'டக்' அவுட்டாக்கினார். பின் கவாஜாவை (2) வெளியேற்றினார். ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சில் 69/3 ரன் எடுத்து, 102 ரன் முன்னிலை பெற்றிருந்தது. சீலஸ் 2 விக்கெட் சாய்த்தார்.