தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/ரென்ஷா சதம்: ஆஸி., சுலப வெற்றி

ரென்ஷா சதம்: ஆஸி., சுலப வெற்றி

ரென்ஷா சதம்: ஆஸி., சுலப வெற்றி


ADDED : செப் 15, 2026 11:54 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 15, 2026 11:54 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஹராரே: முதல் ஒருநாள் போட்டியில் மாட் ரென்ஷா சதம் விளாச, ஆஸ்திரேலிய அணி 59 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஜிம்பாப்வே சென்றுள்ள ஆஸ்திரேலிய அணி மூன்று போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி நேற்று ஹராரே, ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடந்தது. 'டாஸ்' வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் மிட்சல் மார்ஷ் பேட்டிங் தேர்வு செய்தார்.

ரென்ஷா சதம்

ஆஸ்திரேலிய அணிக்கு மிட்சல் மார்ஷ் (36), டிராவிஸ் ஹெட் (4) ஜோடி மோசமான துவக்கம் கொடுத்தது. கூப்பர் கொனாலி (51) அரைசதம் அடித்து உதவினார்.

அலெக்ஸ் கேரி (27), ஆலிவர் (30) அணியின் ஸ்கோரை உயர்த்த உதவினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மாட் ரென்ஷா. ஒருநாள் அரங்கில் முதல் சதம் அடித்தார். 94 பந்தில் 109 ரன் எடுத்த நிலையில் நியூமென் பந்தில் அவுட்டானார். ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 294 ரன் குவித்தது. ஜிம்பாப்வே சார்பில் நியூமென், அதிகபட்சம் 5 விக்கெட் சாய்த்தார்.

பேட்டிங் திணறல்

ஜிம்பாப்வே அணிக்கு பிரையன் பென்னெட், பென் கர்ரான் (0) ஜோடி துவக்கம் கொடுத்தது. நாதன் எல்லிஸ் 'வேகத்தில்' முதலில் இன்னொசென்ட் (18), அடுத்து பென்னெட் (25) அவுட்டாகினர். 'மிடில் ஆர்டரில்' எர்வின் (59), கேப்டன் சிக்கந்தர் ராசா (57), வெஸ்லே (22) சற்று கைகொடுத்தனர். மற்றவர்கள் கைவிட, ஜிம்பாப்வே அணி 45.1 ஓவரில் 235 ரன்னில் ஆல் அவுட்டாகி தோல்வியடைந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us