
சிட்னி: கேப்டனாக செயல்பட வார்னர் மீது விதிக்கப்பட்டு இருந்த தடை விலக்கப்பட்டது.
ஆஸ்திரேலியா அணி, கடந்த 2018ல் தென் ஆப்ரிக்க மண்ணில் கேப்டவுன் டெஸ்டில் பங்கேற்றது. அப்போது பந்தை சுரண்டிய சர்ச்சையில் சிக்கிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், வார்னர், பான்கிராப்டுக்கு, போட்டிகளில் பங்கேற்க ஒரு ஆண்டு தடை விதிக்கப்பட்டது.
தவிர எந்த அணிக்கும் கேப்டனாக செயல்படக் கூடாது என வார்னருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. தற்போது ஒருநாள், டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்ற வார்னர் 38, தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து, தன் மீதான தடையை நீக்குமாறு, ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டிடம் (சி.ஏ.,) முறையிட்டார்.
இதுகுறித்து விசாரித்த மூன்று பேர் கொண்ட சி.ஏ., 'ரிவியூ' குழு, வார்னர் கேப்டன் பதவி மீதான தடையை நீக்கியது. இதனால் வார்னர் உள்ளூர் தொடரில் கேப்டனாக செயல்படும் வாய்ப்பு வந்துள்ளது.

