/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
ஆப்கன் பிடியில் தப்பிய வங்கம் * முதல் 'டி-20' போட்டியில்...
/
ஆப்கன் பிடியில் தப்பிய வங்கம் * முதல் 'டி-20' போட்டியில்...
ஆப்கன் பிடியில் தப்பிய வங்கம் * முதல் 'டி-20' போட்டியில்...
ஆப்கன் பிடியில் தப்பிய வங்கம் * முதல் 'டி-20' போட்டியில்...
ADDED : அக் 03, 2025 10:51 PM

சார்ஜா: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் 'டி-20' போட்டியில், 9 ரன் இடைவெளியில் 6 விக்கெட்டுகளை இழந்த போதும், 4 விக்கெட்டில் வெற்றி பெற்றது வங்கதேச அணி.
வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் மூன்று போட்டி கொண்ட 'டி-20' தொடர் சார்ஜாவில் நடக்கின்றன. முதல் போட்டியில் 'டாஸ்' வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. ரஹ்மானுல்லா குர்பாஸ் (40), முகமது நபி (38) கைகொடுக்க, ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவரில் 151/9 ரன் எடுத்தது. வங்கதேசத்தின் தன்ஜிம், ரிஷாத் தலா 2 விக்கெட் சாய்த்தனர்.
பின் களமிறங்கிய வங்கதேச அணிக்கு தன்ஜித் ஹசன், பர்வேஸ் ஜோடி சூப்பர் துவக்கம் கொடுத்தது. இருவரும் அரைசதம் அடித்தனர். முதல் விக்கெட்டுக்கு 11.4 ஓவரில் 109 ரன் சேர்த்த போது, பர்வேஸ் (54) அவுட்டானார்.
ரஷித் மிரட்டல்
13வது ஓவரை வீசிய கேப்டன் ரஷித் கான், சைப் ஹசன் (0), தன்ஜித் ஹசனை (51) அவுட்டாக்கினார். தனது அடுத்த ஓவரில் (15) மிரட்டிய ரஷித் கான், ஜாக்கர் அலி (6), ஷமிமை (0) வெளியேற்றினார். நுார் அகமது சுழலில் தன்ஜித் சாகிப் (0) திரும்பினார்.
வங்கதேச அணி ஒருகட்டத்தில் 109/1 என இருந்தது. அடுத்து 9 ரன் எடுப்பதற்குள், 6 விக்கெட்டுகளை இழந்து 118/6 என திணறியது.
நுாருல் ஹசன் (23), ரிஷாத் (14) இணைந்து அவுட்டாகாமல் அணியை கரை சேர்க்க, ஆப்கானிஸ்தான் பிடியில் இருந்து தப்பியது வங்கதேச அணி. 18.4 ஓவரில் 153/6 ரன் எடுத்து, 4 விக்கெட்டில் வெற்றி பெற்றது.