தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/இலங்கை அணி பதிலடி * சதம் விளாசினார் நிசங்கா

இலங்கை அணி பதிலடி * சதம் விளாசினார் நிசங்கா

இலங்கை அணி பதிலடி * சதம் விளாசினார் நிசங்கா


ADDED : ஜூன் 19, 2025 11:00 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 19, 2025 11:00 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காலே: இலங்கை சென்றுள்ள வங்கதேச அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் காலேயில் நடக்கிறது. இரண்டாவது நாள் முடிவில் வங்கதேச அணி, முதல் இன்னிங்சில் 484/9 ரன் எடுத்திருந்தது.

நேற்று மூன்றாவது நாள் ஆட்டம் நடந்தது. நாகித் ராணா 'டக்' அவுட்டாக, வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 495 ரன்னில் ஆல் அவுட்டானது. இலங்கை சார்பில் அசிதா, அதிகபட்சம் 4 விக்கெட் சாய்த்தார்.

அடுத்து களமிறங்கிய இலங்கை அணிக்கு பதும் நிசங்கா, லகிரு உதரா (29) ஜோடி சுமார் துவக்கம் கொடுத்தது. நிசங்கா, சண்டிமால் (54) இணைந்து இரண்டாவது விக்கெட்டுக்கு 157 ரன் சேர்த்தனர்.

தனது கடைசி டெஸ்டில் விளையாடும் ஏஞ்சலோ மாத்யூஸ், 39 ரன் எடுத்து மோமினுல் பந்தில் அவுட்டானார். நிசங்கா 187 ரன் (256 பந்து, 23 பவுண்டரி, 1 சிக்சர்) ஹசன் மகமுது பந்தில் போல்டானார்.

அடுத்து வந்த கமிந்து மெண்டிஸ், கேப்டன் தனஞ்செய டிசில்வா வேகமாக ரன் சேர்த்தனர். மூன்றாவது நாள் முடிவில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 368 ரன் எடுத்து, 127 ரன் பின்தங்கி இருந்தது. மெண்டிஸ் (37), டிசில்வா (17) அவுட்டாகாமல் இருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us