sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 08, 2026 ,மாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

கிரிக்கெட்

/

தமிழக அணி வெற்றி

/

தமிழக அணி வெற்றி

தமிழக அணி வெற்றி

தமிழக அணி வெற்றி


ADDED : மார் 07, 2026 10:53 PM

Google News

ADDED : மார் 07, 2026 10:53 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: 'ஒன் டே' டிராபி தொடரில் தமிழக அணி 9 ரன்னில் ஜார்க்கண்ட் அணியை வீழ்த்தியது.

இந்திய கிரிக்கெட் போர்டு சார்பில் 23 வயதுக்குட்பட்ட பெண்கள் அணிகளுக்கான 'ஒன் டே' டிராபி எலைட் தொடர் நடத்தப்படுகிறது. நேற்று புதுச்சேரியில் நடந்த போட்டியில் தமிழகம், ஜார்க்கண்ட் அணிகள் மோதின.

முதலில் களமிறங்கிய தமிழக அணிக்கு கமலினி, சுபாஹரிணி ஜோடி சூப்பர் துவக்கம் கொடுத்தது. முதல் விக்கெட்டுக்கு 66 ரன் சேர்த்த போது சுபாஹரிணி (30) அவுட்டானார். கமலினி (65) அரைசதம் அடித்தார். ரினாஸ் தன் பங்கிற்கு 71 ரன் எடுத்தார். தமிழக அணி 50 ஓவரில் 255/3 ரன் எடுத்தது. கேப்டன் ரோஷினி (46), ஐஸ்வர்யா (22) அவுட்டாகாமல் இருந்தனர்.

அடுத்து களமிறங்கிய ஜார்க்கண்ட் அணிக்கு பிரியங்கா (54), குமாரி பாலக் (71) மட்டும் கைகொடுத்தனர். மற்றவர்கள் ஏமாற்ற, 50 ஓவரில் 246/8 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது.






      Dinamalar
      Follow us