தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/தமிழக அணி 'ஹாட்ரிக்'

தமிழக அணி 'ஹாட்ரிக்'

தமிழக அணி 'ஹாட்ரிக்'


ADDED : மார் 10, 2026 11:06 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 10, 2026 11:06 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: 'ஒன் டே' டிராபி தொடரில் தமிழக அணி 7 விக்கெட்டில் ஹரியானாவை வீழ்த்தியது.

இந்திய கிரிக்கெட் போர்டு சார்பில் 23 வயதுக்குட்பட்ட பெண்கள் அணிகளுக்கான 'ஒன் டே' டிராபி எலைட் தொடர் நடத்தப்படுகிறது. புதுச்சேரியில் நடந்த போட்டியில் தமிழகம், ஹரியானா அணிகள் மோதின.

முதலில் களமிறங்கிய ஹரியானா அணிக்கு தனிஷ்கா (0), தீயா யாதவ் ஜோடி துவக்கம் தந்தது. சமீபத்தில் இரட்டை சதம் விளாசிய தீயா, நேற்று 80 ரன் எடுத்தார். கோமல் 62, தீபிகா 43 ரன் எடுத்து உதவினர். 50 ஓவரில் ஹரியானா அணி 226/9 ரன் மட்டும் எடுத்தது. தமிழகத்தின் சார்பில் அக்சரா 3, ஐஸ்வர்யா, ரம்யாஸ்ரீ, இலோக்சி தலா 2 விக்கெட் சாய்த்தனர்.

தமிழக அணிக்கு கமலினி (16), சுபாஹரிணி ஜோடி துவக்கம் கொடுத்தது. சுபாஹரிணி (53) அரைசதம் அடித்தார். அடுத்து இணைந்த ரினாஸ், கேப்டன் ரோஷினி என இருவரும் அரைசதம் அடித்தனர். 3வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 113 ரன் சேர்த்த போது, ரோஷினி (65) அவுட்டானார்.

தமிழக அணி 45.2 ஓவரில் 227/3 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ரினாஸ் (75), ஐஸ்வர்யா (7) அவுட்டாகாமல் இருந்தனர். முதல் இரு போட்டியில் விதர்பா, ஜார்க்கண்ட்டை வென்ற தமிழகம், ஹரியானாவை சாய்த்து, இத்தொடரில் 'ஹாட்ரிக்' வெற்றியை பதிவு செய்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us