/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
தமிழக அணி முன்னிலை * துஷார் ரஹேஜா, பிரித்வி ஷா சதம்
/
தமிழக அணி முன்னிலை * துஷார் ரஹேஜா, பிரித்வி ஷா சதம்
தமிழக அணி முன்னிலை * துஷார் ரஹேஜா, பிரித்வி ஷா சதம்
தமிழக அணி முன்னிலை * துஷார் ரஹேஜா, பிரித்வி ஷா சதம்
ADDED : ஆக 19, 2025 10:46 PM

சென்னை: தமிழக கிரிக்கெட் சங்கம் சார்பில் புச்சி பாபு கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது. மும்பை, பஞ்சாப் உட்பட மொத்தம் 16 அணிகள் பங்கேற்கின்றன. தமிழகத்தின் சார்பில் தமிழக கிரிக்கெட் சங்க தலைவர் லெவன், தமிழக கிரிக்கெட் சங்க லெவன் என இரு அணிகள் பங்கேற்கின்றன.
நேற்று 2வது நாள் ஆட்டம் நடந்தன. திருவள்ளூரில் நடக்கும் போட்டியில் தமிழக கிரிக்கெட் சங்க தலைவர் லெவன், இமாச்சல பிரதேச அணிகள் மோதுகின்றன. முதலில் களமிறங்கிய தமிழக கிரிக்கெட் சங்க தலைவர் லெவன் அணி முதல் இன்னிங்சில் 274 ரன் எடுத்து.
நேற்று இமாச்சல பிரதேச அணி முதல் இன்னிங்சில் 214 ரன்னில் ஆல் அவுட்டானது. தமிழகத்தின் அச்யுத், 5 விக்கெட் சாய்த்தார். பின் களமிறங்கிய தமிழக கிரிக்கெட் சங்க தலைவர் லெவன் அணி 2வது இன்னிங்சில் 131/1 ரன் எடுத்து, 191 ரன் முன்னிலை பெற்றிருந்தது.
துஷார் சதம்
மற்றொரு போட்டியில் தமிழக கிரிக்கெட் சங்க லெவன், மும்பை அணிகள் மோதுகின்றன. மும்பை அணி முதல் இன்னிங்சில் 412/5 ரன் எடுத்திருந்தது. பின் களமிறங்கிய தமிழக அணிக்கு, துஷார் ரஹேஜா 137 ரன் எடுத்து உதவினார். 2வது நாள் முடிவில் முதல் இன்னிங்சில் 325/5 ரன் எடுத்து, 87 ரன் பின்தங்கி இருந்தது.
சென்னையில் நடக்கும் போட்டியில் மஹாராஷ்டிரா, சத்தீஷ்கர் அணிகள் மோதுகின்றன. சத்தீஷ்கர் அணி முதல் இன்னிங்சில் 252 ரன் எடுத்தது. மஹாராஷ்டிரா அணிக்கு பிரித்வி ஷா (111) சதம் கைகொடுக்க, முதல் இன்னிங்சில் 217 ரன் எடுத்தது. இரண்டாவது நாள் முடிவில் சத்தீஷ்கர் அணி இரண்டாவது இன்னிங்சில் 43/2 ரன் எடுத்து, 78 ரன் முன்னிலை பெற்றிருந்தது.