sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

கிரிக்கெட்

/

மஹாராஜனோடு வெற்றி வந்து சேரும்... * தென் ஆப்ரிக்க அணிக்கு 'சுழல்' யோகம்

/

மஹாராஜனோடு வெற்றி வந்து சேரும்... * தென் ஆப்ரிக்க அணிக்கு 'சுழல்' யோகம்

மஹாராஜனோடு வெற்றி வந்து சேரும்... * தென் ஆப்ரிக்க அணிக்கு 'சுழல்' யோகம்

மஹாராஜனோடு வெற்றி வந்து சேரும்... * தென் ஆப்ரிக்க அணிக்கு 'சுழல்' யோகம்


ADDED : ஆக 19, 2025 10:12 PM

Google News

ADDED : ஆக 19, 2025 10:12 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கெய்ர்ன்ஸ்: முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்ரிக்க அணி 98 ரன் வித்தியாசத்தில் வென்றது. தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது.

ஆஸ்திரேலியா சென்றுள்ள தென் ஆப்ரிக்க அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி நேற்று கெய்ர்ன்சில் நடந்தது. வலது கணுக்கால் காயம் காரணமாக தென் ஆப்ரிக்க அணியில் இருந்து ரபாடா விலகினார். 'டாஸ்' வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் மிட்சல் மார்ஷ், 'பவுலிங்' தேர்வு செய்தார்.

மார்க்ரம் அபாரம்

தென் ஆப்ரிக்க அணியின் 'டாப்-ஆர்டர்' பேட்டர்கள் ரிக்கிள்டன் (33), மார்க்ரம் (82), பிரீட்ஸ்கி (57), கேப்டன் பவுமா (65) ரன் மழை பொழிந்தனர். பிரவிஸ் (6) ஏமாற்றினார். டிவார்ஷியஸ் வீசிய கடைசி பந்தை முல்டர் சிக்சருக்கு அனுப்ப, தென் ஆப்ரிக்க அணி 50 ஓவரில் 296/8 ரன் குவித்தது. முல்டர் (31) அவுட்டாகாமல் இருந்தார்.

ஆஸ்திரேலியா சார்பில் ஹேசல்வுட் உள்ளிட்ட 'வேகங்கள்' தடுமாறிய நிலையில், 'பார்ட்- டைம்' ஸ்பின்னர் டிராவிஸ் ஹெட் 4 விக்கெட் வீழ்த்தினார்.

முதல் 5 விக்கெட்

சவாலான இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணிக்கு டிராவிஸ் ஹெட் அதிரடி துவக்கம் தந்தார். பர்கர் ஓவரில் 5 பவுண்டரி விளாசினார். ஆடுகளம் 'சுழலுக்கு' ஒத்துழைப்பதை கணித்த கேப்டன் பவுமா உடனே அறிமுக பிரெனலன் சுப்ராயனை அழைத்தார். இவரது வலையில் ஹெட் (27) சிக்கினார். பின் இந்திய வம்சாவளி வீரரான கேஷவ் மஹாராஜ் 'சுழல்' ஜாலம் காட்டினார். தனது முதல் பந்தில் லபுசேனை (1) அவுட்டாக்கினார். அடுத்த ஓவரில் கிரீனை (3) போல்டாக்கினார். தொடர்ந்து மிரட்டிய இவரது ஒரே ஓவரில் இங்லிஸ் (5), கேரி (0) அடுத்தடுத்து நடையை கட்டினர். ஹார்டியை (4) போல்டாக்கிய மஹாராஜ், ஒருநாள் அரங்கில் முதல் முறையாக 5 விக்கெட் வீழ்த்தினார். மிட்சல் மார்ஷ் (88), டிவார்ஷியஸ் (33) சற்று போராடினர். ஆஸ்திரேலேிய அணி 40.5 ஓவரில் 198 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி தோல்வி அடைந்தது.

ஆட்டநாயகன் விருதை மஹாராஜ் (10-1-33-5) வென்றார்.

சரிந்த ஆஸி.,

60/0-89/6

ஆஸ்திரேலிய அணி 7 ஓவரில் 60/0 ரன் எடுத்து வலுவாக இருந்தது. அடுத்த 29 ரன்களில் 6 விக்கெட்டுகளை இழந்தது. 16.2 ஓவரில் 89/6 என்ற நிலைக்கு தள்ளப்பட்டது. இதில் மஹாராஜ் 4.2 ஓவரில் 9 ரன் மட்டும் கொடுத்து 5 விக்கெட் கைப்பற்றினார். தொடர்ந்து 10 ஓவர் வீசி 5/33 விக்கெட் வீழ்த்தினார்.

300 விக்கெட்

ஆஸ்திரேலிய மண்ணில், ஒருநாள் போட்டியில் 5 விக்கெட் வீழ்த்திய முதல் தென் ஆப்ரிக்க 'ஸ்பின்னர்' ஆனார் மஹாராஜ். நேற்று முதல் விக்கெட் வீழ்த்திய போது சர்வதேச கிரிக்கெட்டில் 300 விக்கெட் எட்டினார். டெஸ்டில் 203, ஒருநாள் போட்டியில் 63, 'டி-20'ல் 38 என 147 போட்டியில் 304 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.






      Dinamalar
      Follow us