தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/எந்தப்பக்கம் செல்லும் சேப்பாக்கம்... * இந்திய ரசிகர்கள் எதிர்பார்ப்பு

எந்தப்பக்கம் செல்லும் சேப்பாக்கம்... * இந்திய ரசிகர்கள் எதிர்பார்ப்பு

எந்தப்பக்கம் செல்லும் சேப்பாக்கம்... * இந்திய ரசிகர்கள் எதிர்பார்ப்பு


ADDED : பிப் 24, 2026 11:13 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 24, 2026 11:13 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நாளை நடக்கும் 'டி-20' உலக கோப்பை 'சூப்பர்-8' போட்டியில் இந்தியா, ஜிம்பாப்வே மோதுகின்றன. கடந்த சவாலில் தென் ஆப்ரிக்காவிடம் வீழ்ந்த இந்திய அணி, இக்கட்டான நிலையில் உள்ளது. ஜிம்பாப்வேக்கு எதிராக 'மெகா' வெற்றி பெற்று, 'ரன் ரேட்டை' உயர்த்தினால் மட்டுமே அரையிறுதி வாய்ப்பை தக்க வைக்க முடியும்.

விளையாடும் 'லெவனில்' அக்சர் படேல், சாம்சன் இடம் பெறலாம். அபிஷேக் சர்மா நீக்கப்படலாம். நேற்று இந்திய வீரர்கள் வலை பயிற்சியில் ஈடுபட்டனர். அக்சர் படேல் அரை மணி நேரம் பவுலிங் பயிற்சி மேற்கொண்டார்.

இவர், வாஷிங்டன் சுந்தருக்கு பதில் இடம் பெறலாம். ரிங்கு சிங் அவசரமாக சொந்த ஊர் திரும்பிய நிலையில், குல்தீப் யாதவ் சேர்க்கப்பட வாய்ப்பு உண்டு.

மாறிய களம்

சேப்பாக்கம் மைதானம் கடந்த காலங்களில் 'ஸ்பின்னர்'களுக்கு ஒத்துழைக்கும். தற்போது உலக கோப்பை தொடருக்காக அமைக்கப்பட்ட புதிய ஆடுகளம் 'பேட்டர்கள்' பக்கம் மாறி உள்ளது. இங்கு நடந்த ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி 183 ரன்னை 17.5 ஓவரில் 'சேஸ்' செய்து வென்றது. ஐக்கிய அரபு எமிரேட்சிற்கு எதிராக நியூசிலாந்து அணி 175 ரன்னை 15.2 ஓவரில் எட்டியது. கனடா அணியின் யுவராஜ் சம்ரா, 65 பந்தில் 110 ரன் (எதிர், நியூசி.,) விளாசினார்.

இப்போட்டியிலும் பந்துகள் சுழன்று வராததால், நியூசிலாந்து அணி 15.1 ஓவரில் 176 ரன்னை விரட்டியது. இதனால் கேப்டன் சூர்யகுமார், இஷான் கிஷான் உள்ளிட்ட இந்திய பேட்டர்களுக்கு ஜிம்பாப்வே 'ஸ்பின்னர்'கள் சிக்கந்தர் ராசா, முசரபானி சவால் கொடுப்பது கடினம்.

ஜிம்பாப்வே பயிற்சியாளர் ஜஸ்டின் சாம்மன்ஸ் கூறுகையில்,''வெஸ்ட் இண்டீசிடம் 107 ரன் வித்தியாசத்தில் தோற்றது ஏமாற்றம். இந்திய அணியும் எங்களுக்கு எதிராக அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிக்கும். வெஸ்ட் இண்டீசிற்கு எதிரான போட்டியில் பவுலர்கள் தவறு செய்தனர். இதிலிருந்து பாடம் படிக்க வேண்டும். சேப்பாக்கம் மைதானம் பெரியது என்பது பவுலர்களுக்கு நிம்மதி தரும்,''என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us