/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
426 'நாட் அவுட்' * ஹரியானா வீரர் கலக்கல்
/
426 'நாட் அவுட்' * ஹரியானா வீரர் கலக்கல்
ADDED : நவ 09, 2024 11:09 PM

சுல்தான்புர்: சி.கே.நாயுடு டிராபி லீக் போட்டியில் ஹரியானா வீரர் யஷ்வர்தன் தலால் 426 ரன் குவித்தார்.
இந்திய கிரிக்கெட் போர்டு சார்பில் 23 வயதுக்கு உட்பட்டோருக்கான சி.கே.நாயுடு டிராபி முதல் தர கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது. ஹரியானாவின் குருகிராமில் உள்ள சுல்தான்புர் மைதானத்தில் நடக்கும் போட்டியில் மும்பை, ஹரியானா அணிகள் மோதுகின்றன. முதல் நாள் முடிவில் ஹரியானா அணி முதல் இன்னிங்சில் 410/0 ரன் எடுத்திருந்தது.
நேற்று இரண்டாவது நாள் ஆட்டம் நடந்தது. அர்ஷ் ரங்கா, யஷ்வர்தன் தலால் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 410 ரன் சேர்த்த போது, அர்ஷ் ரங்கா (151) அவுட்டானார். கேப்டன், சர்வேஷ் 59 பந்தில் 48 ரன் எடுத்து அவுட்டானார்.
மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய யஷ்வர்தன், 451 வது பந்தில், 400 ரன்களை எட்டினார். 2014-15 சீசனுக்குப் பின் இத்தொடரில் 400 ரன்னுக்கும் மேல் எடுத்த முதல் வீரர் ஆனார் யஷ்வர்தன். இரண்டாவது நாள் முடிவில் ஹரியானா அணி முதல் இன்னிங்சில் 8 விக்கெட்டுக்கு 732 ரன் குவித்திருந்தது. யஷ்வர்தன் 426 ரன்னுடன் (12 சிக்சர், 46 பவுண்டரி, 463 பந்து) அவுட்டாகாமல் இருந்தார்.
முதல் வீரர்
சி.கே., நாயுடு (23 வயது) டிராபியில் ஒரு இன்னிங்சில் அதிக ரன் எடுத்த வீரர் ஆனார் யஷ்வர்தன் (426 ரன்). முன்னதாக சமீபத்தில் உ.பி., வீரர் சமீர் ரிஸ்வி, சவுராஷ்டிரா அணிக்கு எதிராக 312 ரன் எடுத்திருந்தார்.