ADDED : ஜன 26, 2026 10:57 PM

திண்டுக்கல்: சி.கே. நாயுடு கோப்பை லீக் போட்டியில், தமிழக அணி 4 விக்கெட்டில் ஆந்திராவை வீழ்த்தியது.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம், என்.பி.ஆர்., கல்லுாரி மைதானத்தில், இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில், சி.கே. நாயுடு கோப்பை (23 வயது) தொடருக்கான லீக் போட்டி நடந்தது. இதன் லீக் போட்டியில் தமிழகம், ஆந்திர அணிகள் மோதின. முதல் இன்னிங்சில் ஆந்திரா 221, தமிழகம் 288 ரன் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் ஆந்திர அணி 224 ரன் எடுத்தது. பின், 158 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தமிழக அணி, மூன்றாவது நாள் முடிவில் இரண்டாவது இன்னிங்சில் 98/5 ரன் எடுத்து, 60 ரன் பின்தங்கி இருந்தது. மாதவ பிரசாத் (49), விக்னேஷ் (16) அவுட்டாகாமல் இருந்தனர்.
நேற்று நான்காவது நாள் ஆட்டம் நடந்தது. மாதவ பிரசாத், விக்னேஷ் என இருவரும் தொடர்ந்து சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். மாதவ பிரசாத் அரைசதம் அடித்தார். ஆறாவது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 100 ரன் சேர்க்க, தமிழக அணியின் வெற்றி உறுதியானது. இந்நிலையில் விக்னேஷ் (39) அவுட்டானார். இருப்பினும், தமிழக அணி இரண்டாவது இன்னிங்சில் 158/6 ரன் எடுத்து, 4 விக்கெட்டில் வெற்றி பெற்றது. மாதவ பிரசாத் (81) அவுட்டாகாமல் இருந்தார்.
