தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/டெசர்ட் வைபர்ஸ் சாம்பியன்

டெசர்ட் வைபர்ஸ் சாம்பியன்

டெசர்ட் வைபர்ஸ் சாம்பியன்


ADDED : ஜன 05, 2026 11:12 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 05, 2026 11:12 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

துபாய்: துபாயில் நடந்த ஐ.எல்., 'டி-20' தொடரின் பைனலில் டெசர்ட் வைபர்ஸ் அணி (20 ஓவர், 182/4), மும்பை எமிரேட்ஸ் அணியை (18.3 ஓவர், 136 ரன்) 47 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி, முதல் முறையாக கோப்பை வென்றது. டெசர்ட் வைபர்ஸ் அணி கேப்டன் சாம் கர்ரான், 51 பந்தில் 74 ரன் விளாசி, சாம்பியன் பட்டம் வெல்ல கைகொடுத்தார்.

இகோர் தியாகோ 'ஹாட்ரிக்'

லிவர்பூல்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் கால்பந்து போட்டியில் பிரன்ட்போர்டு அணி, எவர்டன் அணியை 4-2 என வீழ்த்தியது. பிரன்ட்போர்டு அணியின் முன்கள வீரர் இகோர் தியாகோ 'ஹாட்ரிக்' கோல் (11, 51, 88வது நிமிடம்) அடித்து அசத்தினார். இந்த சீசனில் 14 கோல் அடித்துள்ளார்.

காலிறுதியில் கேமரூன்

ரபாத்: மொரோக்காவில் ஆப்ரிக்க கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. 'ரவுண்ட்-16 போட்டியில்' ஐந்து முறை சாம்பியன் கேமரூன் அணி, தென் ஆப்ரிக்காவை 2-1 என வீழ்த்தி, காலிறுதிக்கு தகுதி பெற்றது. மற்றொரு போட்டியில் மொரோக்கோ அணி, டான்சானியாவை 1-0 என வீழ்த்தியது. மொரோக்கோவின் வெற்றிக்கு பிராஹிம் டியாஸ் (64வது நிமிடம்) ஒரு கோல் அடித்து உதவினார். காலிறுதியில் (ஜன.9) மொரோக்கோ-கேமரூன் அணிகள் மோத உள்ளன.

கோகோ காப் அதிர்ச்சி

பெர்த்: ஆஸ்திரேலியாவின் பெர்த்தில் யுனைடெட் கோப்பை டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஒற்றையர் 'ஏ' பிரிவு துவக்க போட்டியில், உலகின் 3ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் கோகோ காப், ஸ்பெயினின் ஜெசிக்கா பவுசாஸ் மனெய்ராவிடம் (42வது இடம்) 6-1, 6-7, 6-0 என அதிர்ச்சி தோல்வி அடைந்தார். ஸ்பெயின் 1-0 என முன்னிலை பெற்றது.

எக்ஸ்டிராஸ்

* ஆமதாபாத்தில் இன்று நடக்கவுள்ள விஜய் ஹசாரே டிராபி கிரிக்கெட் தொடருக்கான 'ஏ' பிரிவு லீக் போட்டியில் தமிழகம், திரிபுரா அணிகள் மோதுகின்றன. தமிழக அணி, இதுவரை விளையாடிய 5 போட்டியில், ஒன்றில் மட்டும் வெற்றி (4 தோல்வி) பெற்று, 4 புள்ளிகளுடன் 6வது இடத்தில் உள்ளது.

* இந்தியாவில் பெண்களுக்கான கால்பந்து லீக் (ஐ.டபிள்யு.எல்.,) தொடர் நடக்கிறது. 8 அணிகள் மோதுகின்றன. இன்று ஆறாவது சுற்று போட்டிகள் கோல்கட்டாவில் நடக்கின்றன. இதில் ஈஸ்ட் பெங்கால்-கிக்ஸ்டார்ட், சேது-நீடா, , ஸ்ரீபூமி-கார்வல், சேசா-கோகுலம் கேரளா அணிகள் மோதுகின்றன.

* உலக டேக்வாண்டோ தரவரிசை பட்டியல் வெளியானது. இந்திய வீராங்கனை ரூபா பேயர், ஆசிய அளவில் 'நம்பர்-1', உலக அளவில் 6வது இடம் பிடித்தார். இவர் பூம்சே பிரிவில் 100.85 புள்ளி பெற்றுள்ளார். உலக டேக்வாண்டோ தரவரிசையில் சிறந்த இடம் பெற்ற முதல் இந்தியர் என பெருமை பெற்றார்.

* கேலோ இந்தியா பீச் விளையாட்டு, நேற்று டையு நகரில் துவங்கியது. இந்தியா முழுவதும் 1100க்கும் மேற்பட்ட நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர். வாலிபால், கபடி, செபக் தக்ரா உட்பட பல்வேறு விளையாட்டுகள் நடக்க உள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us