ADDED : செப் 23, 2026 03:14 PM

லண்டன்: இங்கிலாந்து அணி வேகப்பந்து வீச்சாளர் மார்க் உட் 36. கடந்த
2015ல் அறிமுகம் ஆனார். 38 டெஸ்ட் (119 விக்.,), 70 ஒருநாள் (80), 38
'டி-20' (54) போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.
கடந்த 2019 (ஒருநாள்),
2022ல் ('டி-20') உலக கோப்பை வென்ற இங்கிலாந்து அணியில் இடம்
பெற்றிருந்தார். தவிர, 2015 முதல் இங்கிலாந்து அணிக்கு 4 முறை ஆஷஸ் வெல்ல
உதவியாக இருந்தார்.
இடது முழல்காலில் ஏற்பட்ட காயத்துக்கு ஆப்பரேஷன்
செய்த மார்க் உட், எட்டு மாதம் போட்டிகளில் பங்கேற்காமல் இருந்தார்.
மீண்டும் அணிக்கு திரும்பிய போதும் காயம் தொல்லை தர, தற்போது போட்டிகளில்
பங்கேற்காமல் உள்ளார்.
தற்போது 11 ஆண்டு கிரிக்கெட் வாழ்க்கையில்
இருந்து ஓய்வு பெற்றுள்ளார். அவர் கூறுகையில்,'' காயத்தில் இருந்து மீண்டு
வர முடிந்த வரை முயற்சித்தேன். துரதிருஷ்டவசமாக முடியாமல் போனது. டெஸ்ட்,
ஒருநாள் போட்டிகளில் பங்கேற்க வேண்டாம் என டாக்டர்கள் 'அட்வைஸ்' தர,
இங்கிலாந்து அணிக்காக மீண்டும் விளையாட வேண்டும் என்ற எனது கனவு மெல்ல
என்னிடம் இருந்து விலகிச் சென்றது. இருப்பினும் தேசத்திற்காக இத்தனை
போட்டிகளில் பங்கேற்றது மகிழ்ச்சி. உண்மையில் நான் அதிர்ஷ்டசாலி தான்,''
என்றார்.
