/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
இங்கிலாந்து மீண்டும் தோல்வி * தொடரை வென்றது நியூசிலாந்து
/
இங்கிலாந்து மீண்டும் தோல்வி * தொடரை வென்றது நியூசிலாந்து
இங்கிலாந்து மீண்டும் தோல்வி * தொடரை வென்றது நியூசிலாந்து
இங்கிலாந்து மீண்டும் தோல்வி * தொடரை வென்றது நியூசிலாந்து
ADDED : அக் 29, 2025 10:03 PM

ஹாமில்டன்: இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டில் தோல்வியடைந்தது.
நியூசிலாந்து சென்றுள்ள இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் வென்ற நியூசிலாந்து 1-0 என முன்னிலையில் இருந்தது. நேற்று இரண்டாவது போட்டி ஹாமில்டனில் நடந்தது. 'டாஸ்' வென்ற நியூசிலாந்து கேப்டன் சான்ட்னர் 'பவுலிங்' தேர்வு செய்தார். 2019 உலக கோப்பை பைனலுக்குப் பின், நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இங்கிலாந்தின் ஆர்ச்சர், நேற்று பங்கேற்றார்.
மழை காரணமாக போட்டி துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இங்கிலாந்து அணிக்கு ஸ்மித் (13), டக்கெட் (1) ஜோடி துவக்கம் தந்தது. ஜோ ரூட் (25), பெத்தெல் (18), கேப்டன் ஹாரி புரூக் (34) சீரான இடைவெளியில் திரும்பினர். சாம் கர்ரான் (17) நிலைக்கவில்லை. ஓவர்டன் அதிகபட்சம் 42 ரன் எடுத்தார். மற்றவர்கள் கைவிட, 36 ஓவரில் இங்கிலாந்து அணி 175 ரன்னில் சுருண்டது. டிக்னெர் அதிகபட்சம் 4 விக்கெட் சாய்த்தார்.
மிட்சல் அபாரம்
நியூசிலாந்து அணிக்கு வில் யங் (0), ரச்சின் ரவிந்திரா ஜோடி துவக்கம் தந்தது. வில்லியம்சன் (21) கைவிட்ட போதும், ரச்சின் 54 ரன் எடுத்தார். டேரில் மிட்சல் தன் பங்கிற்கு அரைசதம் அடித்தார். நியூசிலாந்து அணி 33.1 ஓவரில் 177/5 ரன் எடுத்து வெற்றி பெற்றது. மிட்சல் (56), சான்ட்னர் (34) அவுட்டாகாமல் இருந்தனர். நியூசிலாந்து அணி 2-0 என்ற முன்னிலையுடன் தொடரை கைப்பற்றியது.

