sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

கிரிக்கெட்

/

சூர்யகுமார், சுப்மன் ஆட்டம் வீண் * மழையால் முதல் 'டி-20' ரத்து

/

சூர்யகுமார், சுப்மன் ஆட்டம் வீண் * மழையால் முதல் 'டி-20' ரத்து

சூர்யகுமார், சுப்மன் ஆட்டம் வீண் * மழையால் முதல் 'டி-20' ரத்து

சூர்யகுமார், சுப்மன் ஆட்டம் வீண் * மழையால் முதல் 'டி-20' ரத்து


ADDED : அக் 29, 2025 10:06 PM

Google News

ADDED : அக் 29, 2025 10:06 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கான்பெரா: இந்தியா, ஆஸ்திரேலியா மோதிய முதல் 'டி-20' போட்டி மழையால் ரத்தானது. சூர்யகுமார், சுப்மன் கில்லின் வேகமான் ரன் குவிப்பு வீணானது.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி நேற்று கான்பெராவில் உள்ள மனுகா ஓவல் மைதானத்தில் நடந்தது. வானம் மேக மூட்டமாக காணப்பட, 'டாஸ்' வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் மிட்சல் மார்ஷ், பீல்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தருக்கு இடம் கிடைக்கவில்லை.

மழை குறுக்கீடு

இந்திய அணிக்கு துணைக் கேப்டன் சுப்மன் கில், அபிஷேக் சர்மா ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. ஹேசல்வுட் வீசிய முதல் ஓவரின் கடைசி பந்தில் பவுண்டரி அடித்தார் அபிஷேக். அடுத்து வந்த பார்ட்லெட் ஓவரில் 2 பவுண்டரி விளாசினார். நாதன் எல்லிஸ் வீசிய 4வது ஓவரின் முதல், 3வது பந்தில் சுப்மன் பவுண்டரி அடித்தார். 5வது பந்தில் அபிஷேக் (19) அவுட்டானார். இந்திய அணி 5 ஓவரில் 43/1 ரன் எடுத்த போது மழையால் போட்டி நிறுத்தப்பட்டது.

சூர்யகுமார் விளாசல்

பின் சுப்மன் கில்லுடன் இணைந்தார் கேப்டன் சூர்யகுமார் யாதவ். 45 நிமிட தாமதத்திற்குப் பின் மீண்டும் போட்டி துவங்கியது. தலா 18 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

ஸ்டாய்னிஸ் பந்தில் சுப்மன், குனேமான் பந்தில் சூர்யகுமார் என இருவரும் பவுண்டரி அடித்து ரன் வேகத்தை அதிகரித்தனர். குனேமான் வீசிய 9வது ஓவரின் கடைசி பந்தை சிக்சருக்கு அனுப்பினார் சுப்மன். 10 வது ஓவரை எல்லிஸ் வீசினார். முதல் இரு பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய சூர்யகுமார், அடுத்தபந்தில் சிக்சர் விளாசினார்.

இந்திய அணி 9.4 ஓவரில் 97/1 ரன் எடுத்திருந்த போது, மீண்டும் மழை பெய்தது. வேறு வழியில்லாத நிலையில் முதல் போட்டியை கைவிடுவதாக அம்பயர்கள் அறிவித்தனர். சூர்யகுமார் (39 ரன், 24 பந்து), சுப்மன் (20ல் 37) அவுட்டாகாமல் இருந்தனர். இரண்டாவது போட்டி நாளை மெல்போர்னில் நடக்க உள்ளது.

150 சிக்சர்

நேற்று 2 சிக்சர் அடித்த இந்தியாவின் சூர்யகுமார், சர்வதேச 'டி-20' அரங்கில் 150 சிக்சர் (91 போட்டி) என்ற மைல்கல்லை எட்டிய ஐந்தாவது வீரர் ஆனார். முதல் நான்கு இடத்தில் ரோகித் சர்மா (159ல் 205, இந்தியா), முகமது வசீம் (91ல் 187, யு.ஏ.இ.,), கப்டில் (122ல் 173, நியூசி.,), பட்லர் (144ல் 172, இங்கிலாந்து) உள்ளனர்.

நிதிஷ் குமார் விலகல்

இந்திய அணி வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் நிதிஷ் குமார் 22. இடது தொடைப் பகுதி காயத்தால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் பங்கேற்கவில்லை. இதில் இருந்து மீண்டு வந்த நிலையில், கழுத்து வலி காரணமாக முதல் 3 'டி-20' போட்டிக்கான அணியில் இருந்து விலகினார். இவருக்குப் பதில் ஷிவம் துபே சேர்க்கப்பட்டார்.






      Dinamalar
      Follow us