/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
இந்திய அணி வெற்றி * ஸ்ரேயாஸ், சுப்மன், அக்சர் அபாரம்
/
இந்திய அணி வெற்றி * ஸ்ரேயாஸ், சுப்மன், அக்சர் அபாரம்
இந்திய அணி வெற்றி * ஸ்ரேயாஸ், சுப்மன், அக்சர் அபாரம்
இந்திய அணி வெற்றி * ஸ்ரேயாஸ், சுப்மன், அக்சர் அபாரம்
UPDATED : பிப் 06, 2025 08:40 PM
ADDED : பிப் 05, 2025 11:08 PM

நாக்பூர்: இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி மூன்று போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி மகாராஷ்டிராவில் உள்ள நாக்பூரில் நடந்தது. 'டாஸ்' வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பட்லர், பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் ஜெய்ஸ்வால், ஹர்ஷித் ராணா எனு இருவர் அறிமுகம் ஆகினர்.
இங்கிலாந்து அணிக்கு பில் சால்ட் (43), டக்கெட் (32) ஜோடி துவக்கம் தந்தது. ஜடேஜா, ரூட்டை (19) வெளியேற்றினார். பட்லர் அரைசதம் எட்டினார். இவர் 52 ரன் எடுத்த போது, அக்சர் படேல் சுழலில் சிக்கினார். லிவிங்ஸ்டன் (5), கார்ஸ் (10) கைவிட்டனர். ஒருநாள் அரங்கில் 2வது அரைசதம் எட்டிய பெத்தெலை (52), ஜடேஜா அவுட்டாக்கினார். இங்கிலாந்து அணி 47.4 ஓவரில் 248 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இந்தியா சார்பில் ஹர்ஷித் 3, ஜடேஜா 3 விக்கெட் சாய்த்தனர்.
இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா (2), ஜெய்ஸ்வால் (15) ஜோடி மோசமான துவக்கம் தந்தது. ஸ்ரேயாஸ் (59), 30 வது பந்தில் அரைசதம் எட்டினார். சுப்மன் கில், ஒருநாள் அரங்கில் 14வது, இங்கிலாந்துக்கு எதிராக முதல் அரைசதம் எட்டினார். அக்சர் தன் பங்கிற்கு சொந்த மண்ணில் முதன் முறையாக ஒருநாள் போட்டியில் அரைசதம் அடித்தார்.
4வது விக்கெட்டுக்கு 108 ரன் சேர்த்த போது, அக்சர் (52) அவுட்டானார். அடுத்து வந்த ராகுல் (2) நிலைக்கவில்லை. அடுத்த சில நிமிடத்தில் சுப்மனும் (87) திரும்பினார். இருப்பினும் இந்திய அணி 38.4 ஓவரில் 251/6 ரன் எடுத்து, 4 விக்கெட்டில் வெற்றி பெற்றது. தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது.