தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/ஹர்ஷித் களமிறங்கியது சரியா * பட்லர் எதிர்ப்பு ஏன்

ஹர்ஷித் களமிறங்கியது சரியா * பட்லர் எதிர்ப்பு ஏன்

ஹர்ஷித் களமிறங்கியது சரியா * பட்லர் எதிர்ப்பு ஏன்


ADDED : பிப் 01, 2025 11:15 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 01, 2025 11:15 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மும்பை: நான்காவது 'டி-20' போட்டியில் இங்கிலாந்தின் ஓவர்டன், 141.5 கி.மீ., வேகத்தில் வீசிய பந்து (19.5) பேட்டிங் 'ஆல் ரவுண்டர்' ஷிவம் துபே 'ஹெல்மெட்' மீது தாக்கியது. இதனால் ஏற்பட்ட மூளை அதிர்ச்சி காரணமாக, பீல்டிங் செய்ய துபே வரவில்லை. மாற்று வீரராக, மற்றொரு பேட்டிங் 'ஆல் ரவுண்டர்' ராமன்தீப் சிங் வருவார் என எதிர்பார்த்தனர். ஆனால், வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா களமிறங்கினார். இவர், 3 விக்கெட் சாய்த்து வெற்றிக்கு கைகொடுத்தார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

ஐ.பி.எல்., தொடரில் பேட்டிங், பவுலிங் செய்யும் போது வீரர்களை மாற்றிக் கொள்ளும் 'இம்பேக்ட்' விதியைப் போல இது இருந்ததாக விமர்சனம் எழுந்தது.

இங்கிலாந்து அணி கேப்டன் பட்லர் கூறியது:

மாற்று வீரராக வருபவர், காயமடைந்த வீரருக்கு நிகரானவராக இருந்திருக்க வேண்டும். ஷிவம் துபேவுக்கு ஹர்ஷித் மாற்றாக இருக்க முடியாது. இதை நாங்கள் ஏற்கவில்லை.

ஏனெனில் துபே, மணிக்கு 40 கி.மீ., வேகத்தில் பவுலிங் செய்ய வேண்டும் அல்லது ஹர்ஷித் தனது பேட்டிங் திறமையை அதிகரித்து கொள்ள வேண்டும். அப்போது தான் சரியான மாற்றாக இருக்கும்.

'மேட்ச் ரெப்ரி' (ஸ்ரீநாத்) தான் இம்முடிவுக்கு சம்மதித்ததாக அம்பயர்கள் தெரிவித்தனர். இதனால் எங்களால் மறுக்க முடியவில்லை. இதுகுறித்து ஸ்ரீநாத்திடம் விளக்கம் கேட்டு தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஐ.சி.சி., விதிப்படி...

ஐ.சி.சி., விதிப்படி 'மாற்று வீரராக வரும் வீரர், காயத்தால் வெளியேறிய வீரருக்கு நிகரானவராக இருக்க வேண்டும். மீதமுள்ள போட்டியில் பெரியளவு பாதிப்பை ஏற்படுத்தாத வீரராக இருக்கும் பட்சத்தில் ஐ.சி.சி., 'மேட்ச் ரெப்ரி' அனுமதி வழங்கலாம்,' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவிர, காயத்தால் வெளியேறிய வீரர், மீதமுள்ள போட்டியில் என்ன செய்வாரோ, இதற்கேற்றபடி மாற்று வீரராக சேர்க்கப்பட வேண்டும்.

ஷிவம் துபே பேட்டிங் செய்து முடித்து விட்டார். அடுத்து இவர், பவுலிங், பீல்டிங் செய்வார். இதற்கேற்ப ஹர்ஷித் ராணா, பவுலிங் செய்தார்.

இதற்கு முன் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 'டி-20' போட்டியில் (கான்பெரா), ஜடேஜா (44 ரன்) பேட்டிங் செய்த பின், மாற்று வீரராக சகால் (3 விக்.,) பந்து வீசி வெற்றிக்கு உதவியது, சர்ச்சை ஏற்படுத்தியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us