/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
ஸ்டோக்ஸ் அரைசதம்: இங்கிலாந்து அணி அபாரம்
/
ஸ்டோக்ஸ் அரைசதம்: இங்கிலாந்து அணி அபாரம்
ADDED : நவ 30, 2024 10:40 PM

கிறைஸ்ட்சர்ச்: நியூசிலாந்து சென்றுள்ள இங்கிலாந்து அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் கிறைஸ்ட்சர்ச்சில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் நியூசிலாந்து 348 ரன் எடுத்தது. இரண்டாவது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 319/5 ரன் எடுத்திருந்தது.
ஸ்டோக்ஸ் அபாரம்
நேற்று, மூன்றாம் நாள் ஆட்டம் நடந்தது. ஸ்டோக்ஸ் அரைசதம் கடந்தார். புரூக் 150 ரன்களை எட்டினார். 6வது விக்கெட்டுக்கு 159 ரன் சேர்த்த போது ஹென்றி பந்தில் புரூக் (171 ரன்) அவுட்டானார். அட்கின்சன் 36 பந்தில் 48 ரன் விளாசினார். ஸ்டோக்ஸ் 80 ரன் எடுத்தார்.
நேற்று மட்டும், 33 ஓவரில் 180 ரன் குவித்த இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்சில் 499 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி, 151 ரன் முன்னிலை பெற்றது. கார்ஸ் (33) அவுட்டாகாமல் இருந்தார்.
அடுத்து இரண்டாவது இன்னிங்சை துவக்கிய நியூசிலாந்து அணிக்கு கேப்டன் லதாம் (1), கான்வே (8) ரச்சின் ரவிந்திரா (24) ஏமாற்றினர். அரைசதம் கடந்த வில்லியம்சன், 61 ரன்னில் வோக்ஸ் பந்தில் வீழ்ந்தார். பிலிப்ஸ் (19) நிலைக்கவில்லை.
மூன்றாவது நாள் முடிவில் நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 155/6 ரன் எடுத்து, 4 ரன் மட்டும் முன்னிலை பெற்றிருந்தது.
கைவசம் 4 விக்கெட் மட்டும் உள்ள நிலையில், நியூசிலாந்து தோல்வியில் இருந்து தப்புவது கடினம்.
9000 ரன்...
வில்லியம்சன் நேற்று 26 ரன் எடுத்த போது, டெஸ்டில் 9000 ரன்னை எட்டிய முதல் நியூசிலாந்து வீரர் ஆனார். 103 டெஸ்டில் 9035 ரன் எடுத்துள்ளார். ராஸ் டெய்லர் (112ல் 7683), பிளமிங் (111ல் 7172) அடுத்த இரு இடத்தில் உள்ளனர்.
* டெஸ்டில் அதிக ரன் எடுத்தவர் பட்டியலில் 19வது இடம் பிடித்தார் வில்லியம்சன். முதலிடத்தில் இந்தியாவின் சச்சின் (200ல் 15,921) உள்ளார்.