தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/கோப்பை வென்றது இங்கிலாந்து * 136 ரன் விளாசிய ஹாரி புரூக்

கோப்பை வென்றது இங்கிலாந்து * 136 ரன் விளாசிய ஹாரி புரூக்

கோப்பை வென்றது இங்கிலாந்து * 136 ரன் விளாசிய ஹாரி புரூக்


ADDED : ஜன 27, 2026 10:52 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 27, 2026 10:52 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கொழும்பு: மூன்றாவது போட்டியில் 53 ரன்னில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி, ஒருநாள் கோப்பை வென்றது. ஹாரி புரூக், 66 பந்தில் 136 ரன் விளாச, ஜோ ரூட் 111 ரன் எடுத்தார்.

இலங்கை சென்ற இங்கிலாந்து அணி மூன்று போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. முதல் இரு போட்டியில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றன. மூன்றாவது, கடைசி போட்டி நேற்று கொழும்புவில் நடந்தது. 'டாஸ்' வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.

இரண்டு சதம்

இங்கிலாந்து அணிக்கு துவக்கத்தில் டக்கெட் (7), ரேஹன் (24) ஜோடி துவக்கம் தந்தது. பெத்தெல் 65 ரன் எடுத்தார். அடுத்து இணைந்த ஜோ ரூட், கேப்டன் ஹாரி புரூக் ஜோடி சிறப்பாக செயல்பட்டது. ரூட், 20வது சதம் அடித்தார். புரூக் 57 பந்தில் சதம் விளாசினார். இங்கிலாந்து அணி 50 ஓவரில் 357/3 ரன் குவித்தது. 4வது விக்கெட்டுக்கு 191 ரன் சேர்த்த ரூட் (111), புரூக் (136 ரன், 66 பந்து) ஜோடி அவுட்டாகாமல் இருந்தது.

இலங்கை அணிக்கு நிசங்கா (50), கமில் (22) ஜோடி துவக்கம் தந்தது. குசல் மெண்டிஸ் (20), கேப்டன் அசலங்கா (13), லியனாகே (22) ஏமாற்றினர். பவன் ரத்னாயகே 121 ரன் எடுத்த போதும் வெற்றிக்கு போதவில்லை. இலங்கை அணி 46.4 ஓவரில் 304 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி தோற்றது. இங்கிலாந்து 2-1 என தொடரை கைப்பற்றி, கோப்பை வென்றது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us