தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/பாகிஸ்தான் நிதான ஆட்டம் * கம்ரான் குலாம் சதம்

பாகிஸ்தான் நிதான ஆட்டம் * கம்ரான் குலாம் சதம்

பாகிஸ்தான் நிதான ஆட்டம் * கம்ரான் குலாம் சதம்


ADDED : அக் 15, 2024 11:09 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 15, 2024 11:09 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முல்தான்: முல்தான் டெஸ்டில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாகிஸ்தான் அணி, முதல் நாள் முடிவில், முதல் இன்னிங்சில் 259/5 ரன் எடுத்தது. அறிமுக வீரர் கம்ரான் சதம் அடித்தார்.

பாகிஸ்தான் சென்றுள்ள இங்கிலாந்து அணி மூன்று போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் வென்ற இங்கிலாந்து தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது. இரண்டாவது டெஸ்ட் நேற்று முல்தானில் துவங்கியது. அனுபவ பாபர் ஆசம் அணியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், கம்ரான் குலாம் அறிமுக வாய்ப்பு பெற்றார்.

கேப்டன் ஆன பின் தொடர்ந்து 6 டெஸ்டில் தோற்ற பாகிஸ்தானின் ஷான் மசூது, நேற்று 'டாஸ்' வென்று பேட்டிங் தேர்வு செய்தார்.

அயுப் அரைசதம்

பாகிஸ்தான் அணிக்கு அப்துல்லா சபிக் (7), சைம் அயுப் ஜோடி மோசமான துவக்கம் தந்தது. ஷான் மசூது 3 ரன்னில், லீச் சுழலில் அவுட்டானார். பாகிஸ்தான் 19/2 ரன் என திணறியது. பின் அயுப், கம்ரான் குலாம் இணைந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி, அணியை மீட்டனர். அயுப் அரைசதம் கடந்தார். மூன்றாவது விக்கெட்டுக்கு 149 ரன் எடுத்த போது, அயுப் (77) அவுட்டானார்.

கம்ரான் கலக்கல்

ஷாத் ஷகீல் (4) நிலைக்கவில்லை. ஜோ ரூட் பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய கம்ரான், டெஸ்ட் அரங்கின் அறிமுக போட்டியில் சதம் விளாசினார். இவர் 118 ரன்னில் சோயப் பஷிர் சுழலில் அவுட்டானார். முதல் நாள் முடிவில் முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் அணி 259/5 ரன் எடுத்திருந்தது. ரிஸ்வான் (37), சல்மான் (5) அவுட்டாகாமல் இருந்தனர். ஜாக் லீச் 2 விக்கெட் சாய்த்தார்.

ஆறாவது வீரர்

அறிமுக டெஸ்டில், பேட்டிங் ஆர்டரில் நான்காவது இடத்தில் களமிறங்கி, சதம் விளாசிய ஆறாவது வீரர் ஆனார் பாகிஸ்தானின் கம்ரான் குலாம். கடைசியாக 2000ல் வங்கதேச வீரர் அமினுல் இஸ்லாம், இதுபோல சதம் (எதிரணி-இந்தியா) அடித்தார்.

* 1932ல் இங்கிலாந்தின் நவாப் பட்டோடி சீனியர் (எதிர்-ஆஸி.,), இந்தியாவின் குண்டப்பா விஸ்வநாத் (1969, ஆஸி.,), இங்கிலாந்தின் ஹேய்ஸ் (1973, வெ.இண்டீஸ்), பாகிஸ்தானின் சலிம் மாலிக் (1982, இலங்கை) முதல் நான்கு இடத்தில் உள்ளனர்.

* தவிர அறிமுக டெஸ்டில் சதம் அடித்த 13வது பாகிஸ்தான் வீரர் ஆனார் கம்ரான்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us