sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 17, 2026 ,மாசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

கிரிக்கெட்

/

இந்திய அணியில் ஆயுஷ் படோனி * விலகினார் வாஷிங்டன் சுந்தர்

/

இந்திய அணியில் ஆயுஷ் படோனி * விலகினார் வாஷிங்டன் சுந்தர்

இந்திய அணியில் ஆயுஷ் படோனி * விலகினார் வாஷிங்டன் சுந்தர்

இந்திய அணியில் ஆயுஷ் படோனி * விலகினார் வாஷிங்டன் சுந்தர்


ADDED : ஜன 12, 2026 11:17 PM

Google News

ADDED : ஜன 12, 2026 11:17 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: இந்திய அணியில் ஆயுஷ் படோனி சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சு, 'ஆல் ரவுண்டர்' வாஷிங்டன் சுந்தர் 26. தமிழகத்தை சேர்ந்தவர். நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 5 ஓவர் பந்து வீசி, 27 ரன் விட்டுக்கொடுத்தார். பின் காயம் காரணமாக வெளியேற, இவருக்குப் பதில் நிதிஷ் குமார் பீல்டிங் செய்தார்.

பின், வலியை பொருட்படுத்தாமல் 8 வது இடத்தில் பேட்டிங் செய்த வாஷிங்டன், இந்திய அணியின் வெற்றிக்கு கைகொடுத்தார். இருப்பினும் மீதமுள்ள இரு போட்டியில் இருந்து விலகினார்.

இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) வெளியிட்ட செய்தியில்,' வாஷிங்டன் தனது இடது கீழ் விலா பகுதியில் ஏற்பட்ட வலியால் அவதிப்படுகிறார். பி.சி.சி.ஐ., மருத்துவ குழுவின் 'அட்வைஸ்' படி, இவருக்கு 'ஸ்கேன்' செய்யப்பட உள்ளது. இதனால் மீதமுள்ள இரு போட்டியில் இருந்து விலகினார். வாஷிங்டனுக்குப் பதில் ஆயுஷ் படோனி சேர்க்கப்பட்டுள்ளார். இவர், ராஜ்கோட் போட்டிக்கு முன் இந்திய அணியில் இணைந்து கொள்வார்,' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு எப்படி

விஜய் ஹசாரே தொடரில் டில்லி அணி துணைக் கேப்டனாக செயல்பட்டார் ஆயுஷ் படோனி 26. 'ஆப் ஸ்பின்' வீசுவார். முதல் தர போட்டிகளில் 57.96 ரன் சராசரியாக வைத்துள்ளார்.

சமீபத்தில் விக்கெட் கீப்பர் ரிஷாப் பன்ட் (பக்க வலி), திலக் வர்மா (ஆப்பரேஷன்), தற்போது மூன்றாவது வீரராக வாஷிங்டன் காயத்தால் விலகியுள்ளனர்.






      Dinamalar
      Follow us