UPDATED : செப் 20, 2024 10:56 PM
ADDED : செப் 19, 2024 10:52 PM

புதுடில்லி: இந்திய கபடி கூட்டமைப்பை, சர்வதேச கபடி 'சஸ்பெண்ட்' செய்துள்ளது.
சர்வதேச கபடி கூட்டமைப்பு (ஐ.கே.எப்.,) விதிகளுக்கு மாறாக, இந்தியா அமெச்சூர் கபடி கூட்டமைப்பு (ஏ.கே.எப்.ஐ.,) நிர்வாகிகள் தேர்தல் நடத்தாமல் உள்ளது. கோர்ட் உத்தரவின் படி, கடந்த ஐந்து ஆண்டாக நீதிபதி கார்க் தலைமையிலான குழு, கபடி நிர்வாகத்தை கவனித்து வருகிறது.
இதையடுத்து இந்திய கபடி கூட்டமைப்பை, ஐ.கே.எப்., 'சஸ்பெண்ட்' செய்துள்ளது. ஐ.கே.எப்., தலைவர் வினோத் திவாரி கூறுகையில்,'' தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் நியமிக்கப்படாத வரை, ஏ.கே.எப்.ஐ., தடை நீடிக்கும்,'' என்றார்.
இதுகுறித்து இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு, ஐ.கே.எப்., எழுதிய கடிதத்தில்,' ஏ.கே.எப்.ஐ.,யை யார் நிர்வகிக்கின்றனர் என்று தெரியாத வரையில், இந்திய அணிகள் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கப் படமாட்டாது,' என தெரிவித்துள்ளது.
இதனால் இம்மாதம் ஈரானில் நடக்கவுள்ள சீனியர் உலக பீச் கபடி சாம்பியன்ஷிப்பில், இந்திய ஆண், பெண்கள் அணிகள் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

