தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/3000 ரன்... 300 விக்கெட் * ஜடேஜா அசத்தல்

3000 ரன்... 300 விக்கெட் * ஜடேஜா அசத்தல்

3000 ரன்... 300 விக்கெட் * ஜடேஜா அசத்தல்


ADDED : செப் 30, 2024 10:57 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 30, 2024 10:57 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கான்பூர்: இந்தியா வந்துள்ள வங்கதேச அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் இந்தியா வென்றது. இரண்டாவது போட்டி உ.பி.,யில் உள்ள கான்பூர், கிரீன்பார்க் மைதானத்தில் நடக்கிறது. வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 233 ரன்னுக்கு ஆல் அவுட்டானாது. இந்தியாவின் பும்ரா 3, சிராஜ் 2, ஆகாஷ் 2, அஷ்வின் 2 விக்கெட் சாய்த்தனர். சுழலில் அசத்திய ஜடேஜா 1 விக்கெட் சாய்த்தார். இதையடுத்து டெஸ்டில் 3000 ரன், 300 விக்கெட்டுகள் எடுத்த 11 வது வீரர் ஆனார் ஜடேஜா. கபில்தேவ், அஷ்வினுக்கு பிறகு மூன்றாவது இந்தியர் ஆனார்.

* இந்த இலக்கை அதிவேகமாக எட்டிய பவுலர்களில் இயான் போத்தமிற்கு (72 டெஸ்ட்) அடுத்த இடம் பெற்றார் ஜடேஜா (74).

* டெஸ்டில் இலங்கையின் ஹெராத் (433), நியூசிலாந்தின் வெட்டோரிக்கு (362) பின், 300 விக்கெட்டுக்கும் மேல் சாய்த்த மூன்றாவது இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஜடேஜா.

* கும்ளே (619), அஷ்வின் (526), கபில்தேவ் (434), ஹர்பஜன் (417), ஜாகிர் கான் (313), இஷாந்துக்கு (311) அடுத்து இந்த இலக்கை எட்டிய 7வது பவுலர் ஜடேஜா (300).

இதன் விபரம்

வீரர் போட்டி ரன் விக்.,

வார்ன்(ஆஸி.,) 145 3154 708

பிராட்(இங்கி.,) 167 3662 604

அஷ்வின்(இந்தியா) 101 3422 522

கபில்தேவ்(இந்தியா) 131 5248 434

ஹாட்லீ(நியூசி.,) 86 3124 431

ஷான் போலக்(தெ.ஆ.,) 108 3781 421

போத்தம்(இங்கிலாந்து) 102 5200 383

இம்ரான் கான்(பாக்.,) 88 3807 362

வெட்டோரி(நியூசி.,) 113 4531 362

வாஸ்(இலங்கை) 111 3089 355

ஜடேஜா(இந்தியா) 74 3130 300

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us