/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
பும்ரா இல்லாதது பாதிப்பா * ஷிகர் தவான் கணிப்பு
/
பும்ரா இல்லாதது பாதிப்பா * ஷிகர் தவான் கணிப்பு
ADDED : பிப் 18, 2025 11:23 PM

துபாய்: ''சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பும்ரா இல்லாதது இந்திய அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம்,'' என ஷிகர் தவான் தெரிவித்துள்ளார்.
சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் இந்திய அணிக்காக அதிக ரன் எடுத்த முன்னாள் வீரர் ஷிகர் தவான் (10 போட்டி, 701 ரன்) கூறியது:
உலகின் சிறந்த வேகப்பந்து வீச்சாளர் பும்ரா இல்லாதது, இந்திய அணிக்கு பெரிய கவலையாக உள்ளது. இவரது துல்லிய பந்துவீச்சிற்கு மாற்றாக எதுவும் அமையாது. ஐ.சி.சி., தொடர்களில் நெருக்கடியான நேரத்திலும் நிதானமாக செயல்பட்டு அசத்தும் திறமை கொண்டவர்.
ஹர்ஷித் ராணா வரவு எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்திய அணிக்கு இவர் கைகொடுப்பார் என நம்புகிறேன். துணிச்சலாக பந்து வீசுகிறார். இங்கிலாந்து தொடரில் இவரது திறமை வெளிப்பட்டது. மீண்டும் இதுபோல செயல்படும்பட்சத்தில் இந்திய அணியின் வெற்றிக்கு துருப்பு சீட்டாக இருப்பார்.
பேட்டிங்கை பொறுத்தவரையில் அனுபவம், இளமை என இரண்டும் கலந்து சமபலத்தில் உள்ளது. சுப்மன் கில்லுக்கு இத்தொடர் சிறப்பாக அமையலாம்.
இவ்வாறு ஷிர் தவான் கூறினார்.

