தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/துலீப் டிராபி: வைபவ் அபாரம் * அரையிறுதியில் கிழக்கு மண்டலம்

துலீப் டிராபி: வைபவ் அபாரம் * அரையிறுதியில் கிழக்கு மண்டலம்

துலீப் டிராபி: வைபவ் அபாரம் * அரையிறுதியில் கிழக்கு மண்டலம்


ADDED : ஆக 25, 2026 10:57 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 25, 2026 10:57 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: துலீப் டிராபி கிரிக்கெட் தொடரின் பைனலுக்கு கிழக்கு மண்டல அணி முன்னேறியது.

பெங்களூருவில் துலீப் டிராபி கிரிக்கெட் தொடர் காலிறுதி போட்டிகள் நடக்கின்றன. முதல் காலிறுதியில் கிழக்கு மண்டலம், வட கிழக்கு மண்டல அணிகள் மோதின. முதல் இன்னிங்சில் கிழக்கு மண்டல அணி 467 ரன் எடுத்தது.

வட கிழக்கு மண்டல அணி, முதல் இன்னிங்சில் 111 ரன்னுக்கு சுருண்டது. தொடர்ந்து 'பாலோ-ஆன்' பெற்று, இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்தது. நேற்று மூன்றாவது நாளிலும் தடுமாறியது. வைபவ் சூர்யவன்ஷி சுழலில் கிஷான் (25), லெம்டுர் (4) சிக்க, இரண்டாவது இன்னிங்சில் 146 ரன்னில் ஆல் அவுட்டானது. கிழக்கு மண்டலம் சார்பில் சுழலில் அசத்திய அனுகுல் ராய் 5, வைபவ் சூர்யவன்ஷி 2 விக்கெட் சாய்த்தனர்.

கிழக்கு மண்டல அணி, இன்னிங்ஸ், 210 ரன்னில் வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறியது. இதில் மத்திய மண்டலத்தை (ஆக. 30-செப். 2) சந்திக்க உள்ளது.

மற்றொரு காலிறுதியில் முதல் இன்னிங்சில் வடக்கு மண்டலம் 251, மேற்கு மண்டலம் 187 ரன் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் வடக்கு மண்டலம் 222 ரன் எடுத்தது. 287 ரன் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய மேற்கு மண்டலம், மூன்றாவது நாள் முடிவில் 220/7 ரன் எடுத்து, 67 ரன் பின்தங்கி இருந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us