ADDED : ஏப் 14, 2026 11:04 PM

துபாய்: ஐ.சி.சி., சிறந்த வீரராக இந்தியாவின் சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்பட்டார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் ஒவ்வொரு மாதமும் சிறப்பாக செயல்படும் வீரர், வீராங்கனைக்கு விருது வழங்கி கவுரவிக்கப்படும். கடந்த மார்ச் மாதத்தின் விருதுக்கு இந்தியாவின் சஞ்சு சாம்சன், பும்ரா, தென் ஆப்ரிக்காவின் எஸ்தர்ஹியுசன் என 3 வீரர்கள் பரிந்துரைக்கப்பட்டு இருந்தனர்.
இதில் சாம்சன் சிறந்த வீரராக தேர்வானார். இவர், கடந்த மாதம் நடந்த 'டி-20' உலக கோப்பை தொடரில் 5 போட்டியில், 3 அரைசதம் உட்பட 321 ரன் குவித்தார். வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 'சூப்பர்-8' போட்டியில் 97 ரன் விளாசிய இவர், அரையிறுதி (எதிர்: இங்கிலாந்து), பைனலில் (எதிர்: நியூசிலாந்து) தலா 89 ரன் அடித்து, இந்தியா கோப்பை வெல்ல உதவினார். தவிர, சிறந்த வீரருக்கான தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றார். இதையடுத்து சாம்சனுக்கு விருது கிடைத்துள்ளது.
