/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
ஷைபாலி பெயர் பரிந்துரை * ஐ.சி.சி., விருதிற்கு...
/
ஷைபாலி பெயர் பரிந்துரை * ஐ.சி.சி., விருதிற்கு...
ADDED : டிச 05, 2025 11:52 PM

துபாய்: சிறந்த வீராங்கனைக்கான ஐ.சி.சி., விருதுக்கு இந்தியாவின் ஷைபாலி வர்மா பரிந்துரைக்கப்பட்டார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் ஒவ்வொரு மாதமும் சிறப்பாக செயல்படும் வீரர், வீராங்கனைக்கு விருது வழங்கி கவுரவிக்கப்படும். கடந்த நவம்பர் மாத விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டோர் பட்டியல் வெளியானது.
சிறந்த வீராங்கனை விருதுக்கு இந்திய அணி துவக்க வீராங்கனை ஷைபாலி வர்மா, யு.ஏ.இ., அணியின் ஈஷா ஓஜா, தாய்லாந்தின் திபாட்சா பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டன.
இதில் பிரதிகா காயத்திற்கு மாற்றாக களமிறங்கிய ஷைபாலி வர்மா, உலக கோப்பை தொடர் பைனலில், தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டு ஆட்டநாயகி ஆனார்.
வீரர்கள் பிரிவில் தென் ஆப்ரிக்காவின் சைமன் ஹார்மர், வங்கதேசத்தின் தய்ஜுல் இஸ்லாம் உள்ளிட்டோரது பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டு உள்ளன.

