/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
சென்னையில் 4 பயிற்சி போட்டி் * 'டி-20' உலக கோப்பை தொடருக்காக...
/
சென்னையில் 4 பயிற்சி போட்டி் * 'டி-20' உலக கோப்பை தொடருக்காக...
சென்னையில் 4 பயிற்சி போட்டி் * 'டி-20' உலக கோப்பை தொடருக்காக...
சென்னையில் 4 பயிற்சி போட்டி் * 'டி-20' உலக கோப்பை தொடருக்காக...
ADDED : ஜன 27, 2026 10:51 PM

சென்னை: 'டி-20' உலக கோப்பை தொடருக்காக நான்கு பயிற்சி போட்டிகள் சென்னையில் நடக்க உள்ளன.
இந்தியா, இலங்கையில், ஐ.சி.சி., 'டி-20' உலக கோப்பை (பிப். 7 - மார்ச் 8) 10வது சீசன் நடக்கவுள்ளது. மொத்தம் 20 அணிகள், நான்கு பிரிவுகளாக களமிறங்க உள்ளன. 'நடப்பு சாம்பியன்' இந்திய அணி, 'ஏ' பிரிவில் இடம் பெற்றுள்ளது. முதல் சவாலில் அமெரிக்காவை (பிப். 7) சந்திக்க உள்ளது.
இதனிடையே, 'உலக' தொடருக்கு தயாராகும் வகையில் பிப். 2-6ல் பயிற்சி போட்டிகள் நடக்க உள்ளன. இவை பெங்களூருவில் 2, நவி மும்பை, சென்னை, கொழும்புவில் 2 என 6 மைதானங்களில் 16 போட்டிகள் நடக்க உள்ளன. இந்திய அணி பிப். 2ல் அமெரிக்கா, பிப். 4ல் தென் ஆப்ரிக்காவுடன் மோத உள்ளது.
மறுசீரமைக்கப்பட்ட சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நான்கு போட்டிகள் நடக்க உள்ளன. இதில் பிப். 2ல் கனடா-இத்தாலி, பிப். 3ல் நேபாளம்-ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பிப். 5ல் நேபாளம்-கனடா, பிப். 6ல் இத்தாலி-ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் மோத உள்ளன.