தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/இந்திய 'ஏ' அணியில் ஆயுஷ் * 'உலக' பயிற்சியில் பங்கேற்பு

இந்திய 'ஏ' அணியில் ஆயுஷ் * 'உலக' பயிற்சியில் பங்கேற்பு

இந்திய 'ஏ' அணியில் ஆயுஷ் * 'உலக' பயிற்சியில் பங்கேற்பு


ADDED : ஜன 28, 2026 10:01 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 28, 2026 10:01 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மும்பை: 'டி-20' உலக கோப்பை பயிற்சி போட்டியில் பங்கேற்கும் இந்திய 'ஏ' அணியில் ஆயுஷ் படோனி, பிரியான்ஷ் சேர்க்கப்பட்டனர்.

இந்தியா, இலங்கையில், ஐ.சி.சி., 'டி--20' உலக கோப்பை (பிப். 7 - மார்ச் 8) தொடரின் 10வது சீசன் நடக்கவுள்ளது. மொத்தம் 20 அணிகள், நான்கு பிரிவுகளாக களமிறங்க உள்ளன. 'நடப்பு சாம்பியன்' இந்திய அணி, 'ஏ' பிரிவில் இடம் பெற்றுள்ளது.

முதல் சவாலில் அமெரிக்காவை (பிப். 7) சந்திக்க உள்ளது. இதற்குத் தயாராகும் வகையில் இந்திய அணி இரண்டு பயிற்சி போட்டிகளில் பங்கேற்கிறது. இதில் அமெரிக்கா (பிப். 2), தென் ஆப்ரிக்காவுடன் (பிப். 6) மோத உள்ளது.

இதில் பங்கேற்கும் இந்திய 'ஏ' அணியில் டில்லியை சேர்ந்த ஆயுஷ் படோனி, பிரியான்ஷ் ஆர்யா என இருவரும் சேர்க்கப்பட்டனர். சமீபத்தில், வாஷிங்டன் காயம் காரணமாக, நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆயுஷ் படோனிக்கு வாய்ப்பு தரப்பட்டது.

எனினும் எவ்வித போட்டியில் களமிறங்கவில்லை.

தற்போது, 'டி-20' உலக கோப்பை பயிற்சி ஆட்டத்தில் களமிறங்கும் இந்திய 'ஏ' அணியில் இடம் பெற்றுள்ளார். இதனால், மும்பை அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை போட்டியில் டில்லி அணி கேப்டனாக ஆயுஷ் தோசேஜா நியமிக்கப்பட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us