தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/இந்திய அணிக்கு ரூ. 25 கோடி

இந்திய அணிக்கு ரூ. 25 கோடி

இந்திய அணிக்கு ரூ. 25 கோடி


ADDED : மார் 11, 2026 11:04 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 11, 2026 11:04 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

துபாய்: 'டி-20' உலக கோப்பை வென்ற இந்திய அணிக்கு ரூ. 25 கோடி பரிசுப் பணம் வழங்கப்பட்டது.

'டி-20' உலக கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் ஆனது. இதையடுத்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் ஒவ்வொரு அணிக்கும் அதிகாரப்பூர்வமாக பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

சாம்பியனான இந்திய அணிக்கு ரூ. 25 கோடி கிடைத்தது. ஏற்கனவே, இந்திய கிரிக்கெட் போர்டு சார்பில் ரூ. 131 கோடி வழங்கப்பட்டுள்ளது.

பைனலில் தோற்ற நியூசிலாந்துக்கு ரூ. 13 கோடி தரப்பட்டது. அரையிறுதியுடன் திரும்பிய தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்துக்கு தலா ரூ. 9.24 கோடி கிடைத்தது. 'சூப்பர்-8' சுற்றுடன் வெளியேறிய வெஸ்ட் இண்டீஸ் (ரூ. 4.96 கோடி), பாகிஸ்தான் (ரூ. 4.81 கோடி), ஜிம்பாப்வே (ரூ. 4.53 கோடி), இலங்கை (ரூ. 4.38 கோடி( அணிக்கும் பரிசுத் தொகை வழங்கப்பட்டன.

தவிர, லீக் சுற்றில் 3வது இடம் பெற்ற ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், அமெரிக்க அணிக்கு தலா ரூ. 2.85 கோடி கிடைத்தன. வங்கதேசத்திற்குப் பதில் களமிறங்கிய ஸ்காட்லாந்து அணிக்கு ரூ. 2.56 கோடி, அயர்லாந்து அணி ரூ. 2.50 கோடி பெற்றன.

இத்தாலி, நெதர்லாந்து, எமிரேட்ஸ், நேபாள அணிக்கு ரூ. 2.36 கோடி, கனடா, நமீபியா, ஓமனுக்கு ரூ. 2.07 கோடி தரப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us